“ சனாதன தர்மம் பெருமை “
நம் கலாச்சாரமும் ஞானத் தொடர்பும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக நம் நாட்டிற்கு வந்து நம் கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வாய் பிளந்து நின்றனர். எல்லாவற்றிலும் தன்னிறைவோடு விளங்கி நின்றனர்.
அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர்.
நம் கலாச்சாரத்தை அழித்து , அதற்குப் பதிலாக அவர்கள் .கலாச்சாரத்தைப் புகுத்தி நம்மவர்களைக் கீழ்ப்படுத்தி, நம்மை அடிமைப்படுத்தி, நம்மை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
நம் முன்னோர்களிடதில் இருந்த அறிவு யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததாக விளங்கியது என்றே கூறலாம்.
உதாரணங்கள் :
1. கூந்தல் சடை : இளம் பெண்கள் தங்கள் கூந்தலை மூன்று சடைப் போட்டு , அதன் பின் மண்டையில் முடிச்சு போடுவர்.
அர்த்தம் : மூன்று நாடிகளும் – ( இட – பிங்கலை – சுழிமுனை ) பின்னிப் பிணைந்து , சுழிமுனையில் சேர்கிறது என்பதைக் காட்டத்தான் இந்த புறச் செயல்
பிராமணர்கள் அணிந்திருக்கும் பூணூலுக்கும் அருத்தம் இது தான்
2. ஐயர்கள் தங்கள் கேசத்தை நீக்கி , பின் மண்டையில் சிறிது முடியை மட்டும் வைத்திருப்பர்
அர்த்தம் : கேகசத்தை நீக்கியது = இருள் விஷம் எனும் மாயக் காடுகள் அழித்து விட்டோம் என்பது உலகிற்கு தெரிவிப்பது
பின் மண்டை சடைப்பூண்டு = நெற்றிக்கண் திறப்பது பற்றியது
3. கர்ப்பிணிப் பெண்களுக்கு 7ஆம் மாதம் சீர் செய்யும் போது – கூந்தலில் பூ முடித்து , பின் மண்டையில் எல்லா நிற கற்களை உடைய ஒரு பில்லை போன்ற ஒரு ஆபரணத்தை வைப்பர்
எல்லா நிற கற்களை உடைய பில்லை போன்ற ஆபரணம் = நவரத்தினமயமாகிய ஆன்மாவைக் குறிக்கின்றது
மேலும் அச்சமயத்தில் , சூரிய & சந்திர பிரபைகளை முன் நெற்றிக் கேசத்தில் பதிப்பர்
அருத்தம் : சூரிய & சந்திரக் கலைகளாகிய சுவாசம் , நெற்றிக்கு மேலேற வேண்டும் என்பதை தெரியப் படுதத்தான்.
4. பெண்கள் கூந்தலை கொண்டைப் போட்டு , அதில் வகை வகையான பூவைச் செருகி வைப்பர்.
அருத்தம் : ஆன்மாவாகிய பூ அங்குதான் இருக்கிறது என்பதைக் காட்டத்தான்
5. செத்த பிணத்தின் நெற்றியில் நாமம் இடுகின்றனர்
அருத்தம் : நாமம் கீழிலிருந்து மேல் செல்கின்றது- அப்படியெனில் அவர் மீண்டும் இந்தப் புவியில் பிறக்க மாட்டார் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கன்றனர்
நாமம் = மீண்டும் வாரா நெறிக்கு சென்று விட்டார் என்று கூறுகின்றார்.
இந்த வழக்கத்தினால் தான், ஒருவனிடம் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை எனில் , அவன் என்ன நாமம் போட்டுவிட்டானா என்று கேட்கிற வழக்கம் வந்தது
6 திருமணத்தில் :
தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான்.
கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல்
அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம்
ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற பாடலில் – தான் ஆன்மா/சுழிமுனை அனுபவம் அடைந்ததை உறுதிப் படுத்துகிறர்ா.
7 மணமகள் நெற்றியில் ” பொட்டு” வைக்கின்றார்.
பொட்டு = ஆன்மா /புருஷன்
புருஷன் என்பது 7 வித்யா தத்துவங்களில் ஒன்று என்பதைக் கவனிக்கவும்.
8 உச்சியில் பொட்டு வைத்தால் – அங்கு சிவம் இருக்கிறது என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார்கள்
9 மரணத்தில் :
புருஷன் இறந்து விட்டால் , பெண்ணிற்கு, பொட்டு அழித்து விடுகிறார்கள்
அருத்தம் – நெற்றியில் இருக்கும் புருஷனாகிய ஆன்மா இல்லை – அதனால் பொட்டு இல்லை
9 . அதனால் அவளை “முண்டை ” என்றும் அழைக்கின்றார்கள்
அருத்தம் : தலை இல்லாத உடம்பிற்கு பெயர் முண்டம்
அதாவது – இவள் புருஷனாகிய ஆன்மா இல்லாத வெறும் உடம்பாகிய முண்டம் என்று கூறுகின்றார்கள்
சரி இதெல்லாம் நான் இங்கே ஏன் கூறுகிறேன் ??
ஏனில் ??
அழியா ஆன்மாவோடு நம் வாழ்க்கை நெறி , கலாச்சாரம் யாவையும் பின்னிப் பிணைத்துவிட்டபடியால் , ஆங்கிலேயர் / முகம்மதியர் வந்து பல நூறு ஆண்டு , நம் செல்வத்தை கொள்ளை அடித்து சென்றாலும் , கல்வி முறை மாத்தினாலும் , நம் இந்து சனாதன தர்மத்தை அழிக்க முடியவிலை – இந்தியாவும் கைவிடவிலை
ஆப்கானிஸ்தான் இன்றளவும் முன்னேற முடியவிலை – காரணம் நம் சித்தர்கள் அளித்த சாபம் – முன்னேறவே முடியாது
ஏனைய நாடுகள் எல்லாம் மதம் மாறின
ஆனால் இந்தியா இன்னமும் தன் சுயத்தை இழக்கவிலை
கிறித்தவம் அடித்தட்டு மக்களை வேண்டுமானால் மதம் மாத்தி இருக்கலாம்
அவர்க்கு இங்கு அங்கீகாரம் இலை என்பதை இந்த பரங்கியர் மதம் பயன்படுத்தி மக்களை தன் பக்கம் இழுக்குது
அவர்கள் ( இரு மதம் ) எண்ணம் இந்தியாவை துண்டாட / மதம் மாத்தும் எண்ணம் பலிக்காது
ஆன்மாவின் வலிமை அத்தகையது
அது தர்மம் – அழியவே அழியாது
அதனால் சனாதன தர்ம மும் அழியவே அழியாது
வெங்கடேஷ்