“ கரணமும் – உபகரணமும் “
கரணமாம் மனதை வெல்ல
தியானம் தவம் சாதனம் எதுவும் தேவையிலை
அதுக்கு ஒரு உபகரணம் கண்டுபிடித்துள்ளார்
அறிவியல் மருத்துவர் – யோகி – வாசி யோகி
அதில் அமர்ந்தால் போதும்
மனமற்ற எண்ணமற்ற நிலைக்கு கூட்டி சென்றுவிடலாமாம்
நல்ல சிரிப்பாக வேடிக்கையாக இலை
பின் ஏன் நம்மவர் காட்டுக்கு ஓடி
அலைந்து திரிந்து
காய் கனி சருகு தின்று வாழ்ந்து
மனதை வெல்ல வழி துறை முறை தேடினார் ??
பல் சொத்தை பார்த்து பார்த்து
மற்றவர் வித்தை எலாம் கூட சொத்தையாக தெரியுது
இந்த சொத்தை கண்ணுக்கு
வெங்கடேஷ்