“ முப்பூவும் வாசியும் “
இப்போது இந்த இருவர்க்கு தான் சபாஷ் சரியான போட்டி
வாசியாவது ஒரு லட்சம் வாங்குகிறார் கற்றுத்தர
இந்த முப்பூ இதெல்லாம் தாண்டிவிட்டது
பல லட்சங்கள் அள்ளுது
முப்பூ செய்து தருகிறேன் என மிக மிக அதிக விலை பேசுகிறார் வைத்தியர்
உண்மை சம்பவம் – கோவை 2022
இரு மாதம் முன் ஒருவர் பஞ்சாலை தொடர்புடைய தொழில் அதிபர் எனை வந்து சந்தித்தார்
அவர்க்கு ஒரு சித்த வைத்தியர் , முப்பூ தயார் செய்து தருவதாகக்கூறி , இது வரை சுமார் 7 லட்சம் வரை வாங்கிவிட்டாராம்
இன்னம் தயார் செய்து கொண்டிருக்கேன் – சோதனை நிலை என ஏமாத்தி வருவதாகக் கூறினார்
மேலும் பணம் வேணும் என கேட்பதாகக் கூறினார்
நான் : கொடுத்து ஏமாந்தது போதும்
புறம் வேணாம் – அகப் பயிற்சி கற்று செயவும் என்றேன்
வெங்கடேஷ்