“ வள்ளலாரின் ஞான தேகம் “
“ வள்ளல் பெருமானின் ஞான தேகம் பத்திய விளக்கம் தெளிவில்லை “
இதை விளக்குவது தான் இந்த பதிவு
1 ஒருவர் சென்னை சேர்ந்தவர் – சன்மார்க்கம் சார்ந்தவர்
பிரம்ம ஸ்ரீ கூட – சித்த வித்தை
இவர் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை படித்திருக்கார்
சரியாக படித்து , புரிந்திருந்தால் வாசி சித்த வித்தை பக்கமே போயிருக்க மாட்டார் – அவர் போதாத வேளை – அருள் இல்லை
இவரிடம் உரையாடல் – உண்மை சம்பவம்
இவர் :
வள்ளலார் சித்தி வளாகத்தில் இருந்து கொண்டு 5 தொழில் இயற்றி வருகிறார்
சிரிப்பாக வேடிக்கையாக இருக்கு
நான் : உங்களுக்கு ஞான தேகம் என்றால் என்ன என்ற அடிப்படை விளக்கம் தெரியவிலை
“ நான் இந்த உடம்பில் இருக்கிறேன் வரும் நாளில் எல்லார் உடலிலும் புகுந்து கொள்வேன் “ என்ற வள்ளல் பெருமானின் வாசகத்தின் உட்பொருள் புரியவிலை
அவர் : கோபம் வந்துவிட்டது
நட்பை துண்டித்துவிட்டார்
நட்டம் அவர்க்குத் தான் எனக்கிலை
2 மற்றொருவர் மருத்துவ விஞ்ஞானி ஞானி வாசி யோகி
என பன்முகம்
இவர் வள்ளல் பெருமானை நேரடியாக கண்டு பேசலாம் என்ற மாயாஜாலம் செய்கிறார்
கடைசியில் வள்ளல் பெருமானை ஆவியாக்கி விட்டு வேடிக்கை ஆக்கிவிட்டார்
ஏமாத்துவதுக்கு ஒரு அளவிலையா ??
இவர் :
வள்ளல் பெருமான் பூசம் நட்சத்திரத்தில் இருக்கார்
சிவம் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கார்
அப்ப சுத்த சிவம் இருப்பது கைலாயம் சிற்றம்பலம் என்பது ??
பொய்யா??
என்னவென சொல்வது ??
சிரிப்பாக வேடிக்கையாக இருக்கு
வள்ளலார் பூச நட்சத்திரம் அன்று ஒளி தேக சித்தி அடைந்தார்
அதுக்காக அவர் அங்கு வாழ்கிறார் என்பது நகைச்சுவை
இவர்க்கும் ஞான தேகம் என்றால் என்ன என்ற அடிப்படை விளக்கம் தெரியவிலை
30.1.1874 அன்று அவர்க்கு என்ன நடந்தது என தெரியவிலை
அதனால் இவ்வாறு உளறல்
இவர்க்கு பின்னால் இருப்பவர் கதி நினைத்தால் பாவமாக இருக்கு
ஆகையால் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்
ஆர்க்கு அருள் விளக்கம் இருக்கோ ?? அவர்க்கே உண்மைகள் அருள் விளக்கி அருளும்
அது வரை இம்மாதிரி குழப்பம்
வெங்கடேஷ்