“ ஞானிகள் உலக மயம் “
மெய்வழிச்சாலை ஆண்டவர் – அமுத கலைக்ஞான போதம் பகுதி 2
அறுகூறின் சுவைமரமா மிதற்கு வாது
அறுனான்கு பணர்களுண்டு பறவை ஐந்தாம்
கருவான விஸ்வச்சுலாம் விருச்சமென்பார்
காயகற்பம் கரு நெல்லி மரமிதாகும்
திருவான இலைகளெலாம் வேதமாகும்
தெய்வீக மரமிதென்றும் செப்புவார்கள்
“ பெருகுமிந்த மரந்தலை கீழ் மேலே வேரு “
பேரண்ட முகடு வரை நிற்குன் தானே — 64
அதாவது சாலை ஆண்டவர் பிரணவ மரத்தின் தன்மை பெருமை பத்தி பாடுகிறார் .
இந்த மரத்தை தெய்வீக மரம் என்றும் – எல்லா அண்டங்களும் இதில் அடக்கம் என்றும் , இதனுள் 24 ஆன்ம தத்துவமும் , ஐம்புலனும் அடக்கம்
இது உடலை கற்பம் செயும் வல்லபம் உடைத்து
இதன் சிறப்பு :
இதன் வேர் சிரசிலும் , தலை கீழும் இருக்கு என்கிறார்
அதாவது தலை கீழாக தொங்கும் பிரணவ மரம் எனும் அற்புத மரம்
இதே கருத்தைத் தான் உப நிடதமும் கூறுது
“ பிரணவம் மரம் தலை கீழாக தொங்குது “
ஞானியரிடத்தில் கருத்து ஒற்றுமை தான் இருக்கும்
வெங்கடேஷ்