“ சித்த வைத்தியம் – முப்பு அமுரி கல்பம் “
என் பதிவுகள் படித்துவிட்டு , அனேக சித்த வைத்தியர் எனக்கு – முப்பு அமுரி கல்பம் பெருமை பத்தி செய்தி அனுப்புவர் பேசுவர்
நான் : சரி – பாரதம் காந்தாரி எந்த கல்பம் உண்டு , துரியன் உடலை கல்பம் செய்தாள் ??
என கேட்டால் பதில் அளிக்க மாட்டார்
அவர் :
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் – அபர மார்க்கத்தில் உப்பு வகைகளின் பேதமென்றும் மருந்து வகைகள் பேதம் – 5 பூத பேதம்
பர மார்க்கத்தில் சாவேபோ வை யோகக்காட்சிகளில் அனுபவமாகக் காணலாம்
வள்ளலார் அபரம் முன் என்றும் பரம் பின் என்றும் கூறுவதாகவும் , அபரம் அன்றி பரம் கூடாது என்பதும் அவர் வாக்கு
இந்த கதையை எல்லாரும் எனக்கு அனுப்புவார்கள்
அதாவது முப்பு முடிப்பது முன் பின் தான் யோக சாதனமாம் – இவர் வாதம் எடுபடா வாதம்
நான் : உரை நடை
நான் முழுதுமாக நம்புவதிலை – அது முழுமையாக அவர் எழுதியதுமன்று
அவர் கைப்பட எழிதியது சில பகுதிகள் தான்
மத்ததெலாம் அவர் தொண்டர்கள் குறிப்புகள் வைத்து தொகுத்தது
உரை நடையில் காணப்படுவது :
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் : அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் , ஔஷதி பேதமென்றும் , பூத பேதமென்றும் சொல்வது உபாய மார்க்கம்
அக அனுபவமே உண்மை
உபாய மார்க்க வகை தேக பூஷணாதி காமிய சித்தி தரும்
உண்மை மார்க்கம் நீக்க மற சொரூப ஞானத்தை தரும் என்றறிக
ஆகையால் இவர் கூக்குரல் இடுவது எல்லாம் பொய் அபத்தம்
செய்திகளை திரித்து வாதிடுகிறார்
“ வள்ளலார் அபரம் முன் என்றும் பரம் பின் என்றும் கூறுவதாகவும் , அபரம் அன்றி பரம் கூடாது என்பதும் அவர் வாக்கு “
இந்த செய்திகள் எல்லாம் உரை நடையில் இல்லை
உரை நடை :
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் இரண்டு புறத்திலுமுள
உபாய வகை நம்புதல் கூடாது ( இது சித்த வைத்தியர் முப்பு உப்பு கூட்டம் )
உண்மை நம்புதல் வேண்டும் – இது அக ஞான யோக அனுபவம்
இவர் என் நேரத்தை வீணடிக்கிறார்
நான் : அப்படி அபரம் உயர்த்தி வள்ளலார் கூறி இருந்தால் ( இவர் வசதிக்கு மாற்றி கூறிக்கொள்வது ) , ஏன் பர மார்க்கம் பத்தி பேச வேணும் ??
அபரத்தோடு நிறுத்தி இருக்க வேணும் தானே ??
இதுக்கு பதில் இல்லை
நான் எதில் பலமாக உள்ளேனோ – யோகம் ஞானம் அது பத்திக்கேட்காமல் , இந்த முப்பு கூட்டம் – எதில் எனக்கு நாட்டமிலையோ – மருத்துவம் தெரியாதோ ?? அதைப் பத்தி கேள்வி கேட்டு என்னை தொல்லை செய்கிறார் – விளக்கம் கேட்கிறார்
எவ்வளவு கூறினாலும் செக்கு மாடு மாதிரி இந்த முப்பு கல்பம் அமுரி சுத்தி சுத்தி வந்து , அதை பத்தியே கேள்வி கேட்டு தொல்லை
புரிந்து கொள்வதேயிலை
வெங்கடேஷ்