“ திருமந்திரம் – வாசி பெருமை “
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே 570
விளக்கம் :
பூரி எனில் – பிராணாயாமத்தில் பூரகம் குறிக்கவிலை
கலைகளை செழித்து வளரச்செய்தலாகிய வாசி உருவாக்கும் பயிற்சி
வாசி சித்தியானால் உடலுக்கு அழிவிலை
அதை தான் சித்தர் பெருமக்கள் : “ ஏறுகின்ற வாசியது கற்பம் “
அந்த வாசி மேல் செலுத்தினால் அது நாதம் உண்டாக்கும்
அதனால் ஆன்ம அனுபவம் பெறலாமே
ஆனால் உலகம் இதுக்கு பிராணாயாமம் என விளக்கம் அளிக்குது
என் செய ??
உலகத்துக்கும் உண்மைக்கும் தூரம் மிக மிக அதிகம்
வெங்கடேஷ்