திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 1527 |
விளக்கம் :
இரு வினையும் சரிசமம் எனும் அருள் எனும் சத்தினிபாதம் வாய்க்கும் போது , குருவானவர் வந்து ஆட்கொண்டு , தக்க சாதனம் கற்பித்து , ஞானத்தை அளிப்பார்
அதனால் மும்மலம் தீர்ந்து சிவத்துக்கு ஒன்றாவான் ஆன்ம சாதகன்
வெங்கடேஷ்