திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே 1528:
விளக்கம்:
இரவும் பகலுமற்ற துவாத சாந்தப் பெருவெளி விளங்கும் சத்தியை நினைத்து , தவம் செய்து , டம்பம் பெருமை ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிற்க, பரத்தில் விளங்கும் சத்தியானவள் ஆன்ம சாதகனை அன்போடு ஆட்கொள்வாள்
அதாவது அசையாது தவத்தில் நின்றக்கால் சத்தியானவள் நம்மை ஆட்கொள்வாள்
வெங்கடேஷ்