“ ஞானம் பெருமை “
போகர் 7000
ஆணவம் போமே !
நலங்காமல் வாசியினில் ஏறிநின்று
நாள்தோறும் பழக்கமதி லுற்றாயானால்
விலகாமல் சிகாரத்தை வெளியில் ஊத
வெந்திடுமே நினைத்ததெல்லாம் நீறாய் வேகும்
அலங்காமல் அரனுள்ளே ஆடுவான் பார்
அருகிருந்த திசநாதம் அடங்க ஓங்கும்
புலங்காமல் பிறவியறும் ஒன்றாம் ஒன்றில்
பிக்கான ஆணவமும் சமயம் போமே.
விளக்கம் :
வாசியை நாள் தோறும் மேலேற்றி , ஊதி வந்தால் , அக்னி வெளியில் வைத்து ஊதினால் மலமெல்லாம் வெந்துவிடும்
இந்த அனுபவத்துக்கு பிறகு சிவத்தின் நடம் நடைபெறும்
ஒலித்த நாதம் அடங்கும்
பிறவி போம்
ஆணவ மலமும் அறுபடும்
வெங்கடேஷ்