திருவடி தவம் – அனுபவங்கள் Updated till sep 2022
1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும்
2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் –
3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது
4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும்
5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ் காலத்தில் வாழ்வர்
கவலை – பயம் இருக்காது
6 ஆன்மா தன் குணங்களை ஜீவன் ஆகிய நம் மீது பிரதி பலிக்கும்
7 ஒருமையில் இருப்போம்
இரவு பகல்
வெற்றி தோல்வி
இன்பம் துன்பம்
எல்லாம் போய்விடும் –
8 வருங்காலம் – நிகழ்வுகள் எல்லாம் ஆன்மா காட்டும் – வசனம் மூலம் தெரிவிக்கும்
9 சுவாசம் விடா வாழ்வு வாழ வைக்கும்
மிக குறைந்த சுவாசம் தான் தேவை ஆக இருக்கும்
10 சுவாசம் மேல் ஏறி நிற்பதால் விந்து விடா பெண் போகம் சித்திக்கும்
ஆனால் இன்பம் பன்மடங்கு இருக்கும் இது உண்மை –
11 நம் விதியை வினைகளை
தீர்த்துக்கொள்ளலாம்
தள்ளி வைக்கலாம்
திருத்திக்கொள்ளலாம்
12 மன விகாரம் குறைந்து கொண்டே வரும் – நாம் சிறிது சிறிதாக உத்தமனாக மாறுவோம் – புருஷோத்தமனாக மாறுவோம்
13 நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும்
14 நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும்
இது மிக முக்யமான அனுபவம் ஆம்
இது தயவுக்கு கூட்டிச்செல்லும்
15 மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்
16 உடலில் இருக்கும் கழிவுகள் தவம் செயும் போது வெளியேறும் – இது மூக்கில் உதட்டில் ஏற்படும் அரிப்பால் புரிந்து கொள்ளலாம்
17 விழிப்புணர்வு அதிகமாகிக்கொண்டே வரும்
இது உடலைக்கட்டுப்படுத்தும் தந்திரம் ஆம்
இது ஆன்மாவின் செயல் ஆம்
18 உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம்
19 பர உதவிகள் – ஞானிகள் – காட்சியும் உதவியும் நமக்கு கிடைக்கும்
20 உடலில் இருந்து மலர் – கனி வாசம் வீசும் – இது விந்துவில் தவத்தால் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் ஆம்
21 இறை நம்மைக்காக்க ஒரு காவலை வைத்துவிடும்
அவர் நம் கூடவே இருப்பார் 24*7 சூக்குமத்தில்
22 மனதில் சஞ்சலம் இருக்காது – தைரியம் இருக்கும்
23 நாம் முழுமை என்ற உணர்வு வந்துவிடும் – அதனால் மற்றவர் மேல் பொறாமை இருக்காது – ஒப்பீடும் இருக்காது
24 மனம் அசைவை ஒழித்து நிற்கும் சுவற்றில் ஆணி அடித்த படம் போல்
25 தாரணை அனுபவம் சித்திக்கும் – அதாவது 100 எண்ணம் போய் “ ஒரே எண்ணம் சீராய் ஓடும் “ இது பதஞ்சலி யோகத்தின் ஆறாம் படி
26 பொருள்/ நேரம்/ சக்தி/ உடல் அசைவில் எல்லாம் சேமிப்பு பார்க்கும்
27 வாழ்வில் ஒளிமயமான பக்கம் பார்க்க ஆரம்பிக்கும்
28 விழிப்புணர்வு உடலில் எங்கும் பரவி நிற்கும்
29 வெப்பத்தால் உதடு கண் எரியும் – உதடு காய்ந்து போம்
30 ஒரு வித அமைதி கிட்டும் – அது உபசாந்தம் ஆம்
31 மன மயக்கங்கள் குறைந்து கொண்டே வரும்
32 நம் வாழ்வின் பொறுப்பு ஆன்மா தன் கையில் எடுத்துக்கொள்ளும்
அதனால் எல்லாம் சரியான பாதையில் செல்லும்
33 நம் வாழ்வின் செயல்பாடுகள் எல்லாம் பயனுள்ளதாகத்தான் இருக்கும் வீண் என்ற சொல்லே இருக்காது
34 Our Productivity , Efficiency and Utilisation of resources – Time Money Utilities will increase manifold
35 பதஞ்சலி யோகத்தின் 7 ம் படியான “ தியானம் “ – எண்ணமிலா நிலை சித்திக்கும்
மனனமிலா நிலை சித்திக்கும்
36 உருவம் எலாம் கரைந்து அருவ நிலை அனுபவம் சித்திக்கும்
அப்போது மனதால் இயங்க முடியாது
மனம் உருவம் பற்றித்தான் செயல்படும்
37 கண்மணி வல்லபத்தால் மனம் அடங்கிக் கொண்டே வரும்
38 சாதகன் வீரன் ஆக மாறிக்கொண்டே வருவான் – வீரமிக்க மணியால் – விந்து ஆகிய மணியால்
39 பார்வை நோக்கம் குறுகியதிலிருந்து – கண்டத்தில் இருந்து அகண்டமாக விரிவடையும்
எல்லாம் மிக அற்பமாக தோன்றும்
40 உடலை அருள் ஒளியால் காயகல்பம் செய்யும்
தேய்ந்து போன ராஜ உறுப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்
வலு சேர்க்கும்
அதன் வாழ் நாளை நீட்டிக்கச் செயும்
41 பந்தம் அறுத்துக்கொண்டே வரும்
உலகத்துடன் ஒட்டா நிலை வாழ்வு வரும்
42 ஆயுள் நீட்டிப்பு அளிக்கும் தகுதி இருப்பின்
43 சூக்கும உடலை ஸ்தூல உடலில் இருந்து பிரித்து சிகிச்சை அளிக்கும்
ஒளி அணுக்களை சீர் செய்து உடல் நலத்தை சரி செய்யும்
44 பசி தூக்கம் காமம் பெண் போகம் எல்லாம் அதிகமாகி உச்சத்துக்கு சென்று – பின் அடங்கிவிடும் – நாதத்தின் சகாயத்தால்
45 பொது நோக்கம் கைகூடும்
எல்லவரும் உயிர் என்ற பொது நோக்கம் – உறவு எலாம் நீங்கி
46 கற்பகம் எனும் மனோ நிலை சிறிது சிறிதாக சித்திக்கும்
நினைத்தது – வாய் உரைத்தது எலாம் நடக்க ஆரம்பிக்கும்
47 எண்ணம் சொல் கட்டுப்படுத்தும்
48 சரியை கிரியை கழற்றும் – ஈடுபாடு விருப்பம் காட்டாது
49 பேச்சு குறைக்கும் – மௌனம் விழையும்
50 மனதின் குணமாகிய காட்சி – குரல் ( ஒளி – ஒலி ) அடங்கிவிடும்
இதனால் இன்னம் அமைதி வந்துவிடும்
51 நமக்கும் உலகத்துக்கும் தூரம் அதிகமாகிக்கொண்டே போகும்
ராக்கெட்டில் விண் சென்றால் எப்படி இருக்குமோ அவ்வாறிருக்கும்
52 ஆகாயம் எப்படி எதனுடனும் தொடர்பற்று நிற்குதோ ? அவ்வாறு நாமும் எதனுடனும் தொடர்பு இல்லாமல் நிற்போம்
36 வரை கழற்ற தயாராகும் நிலை
ஆன்மா தனிக்குமரி அல்லவா ??
அதான் ஆன்ம சாதகனும் தனித்து – தத்துவ துரிசு அற்று நிற்க வைக்கும்
ஆன்மாவுக்கு சம நிலை அடைய வைப்பதுக்கான முன்னோட்ட நிலை – அனுபவம்
53 கணவன் விருப்பத்துக்கேற்றவாறு மனைவி எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறாளோ ?? அவ்வாறே ஆன்மாவும் தனக்கு ஏற்றவாறு – தனக்கு ஈடாகுமாறு , நம் வாழ்வு மாற்றி அமைக்கும்
54 நீண்ட தவம் புரியவும் – 3 மணி நேரம் போல் ஒரு அமர்வில் தொடர் தவம் புரியவும்
உடல் /மனம் – பலம் தெம்பு உறுதி உற்சாகம் ஊக்கம் அளிக்கும்
55 தவ அனுபவம் அந்த நேரத்தில் மட்டும் இல்லாது – சகஜமாகவே இருக்கும் போதும் தொடரும்
அப்போதும் மனம் அமைதியாக அடங்கி இருக்கும்
56 முப்பூ அனுபவத்தால் உடல் தணல் போல் ஆகிவிடும்
அப்போது அவர் அந்தணர் ஆவர்
அந்தணர் ஆவது – சடங்கால்/பிறப்பால் அல்ல – தவத்தால்
57 நாத விந்து கலப்பால் மாற்றிப்பிறக்க வைக்கும்
58 சும்மா இருக்கவே விரும்பும் – அசைவு விரும்பாது
உடல் மன அசைவு விரும்பாது
59 எலும்பு உருகும் – நெகிழும் – மென்மை அடையும்
அதனால் உடல் காயசித்தி காயகல்பம் அடையும்
இது பல சித்திக்கு வழி கோலும்
60 சாதகன் நல்ல மருந்து , ஞான மருந்தின் அருமை சிறப்பு பெருமை உணர்வான்
அது ஆற்றும் அற்புதங்களைக் கண்கூடாக காண்பான்
நூல் அறிவு அனுபவமாக பார்ப்பான்
61
“ நினைவு எனும் பறவையின்
சிறகை வெட்டிவிடும் “
அதனால் அமைதி அமைதி பேரமைதி தான்
62 சன்மார்க்க ஸ்லோகம் :
அசதோமா சத்கமய படி
பொய்யாகிய உலகத்தில் இருந்து நம்மை உண்மைக்கு இட்டு செல்லும்
மனதின் உலகத்தின் உண்மை முகம் உணர்வோம்
63
உந்தீபற –உள் தீ பறக்கும்
மூலாக்கினி உருவாகும்
64 மனம் வெற்றுப்புத்தகம் நூல் போல் ஆகிவிடும்
( Empty Book )
சித்தர் /வள்ளல் பெருமான் மொழி : எழுதா மறை மாதிரி ஆகிவிடும் மூளை மனம்
ஒன்றுமிலா வெளி என்ற நிலை உருவாகும்
64 மனம் Boomerang மாதிரி சிறிது தூரம் செல்லும் – மீட்டும் நம்மிடம் வந்து சேர்ந்து விடும்
மன அடக்கத்துக்கான அறிகுறி
65 நினைவாற்றல் மிக கூர்மையாக இருக்கும்
66 சித்த மலம் அறுக்கும்
67 முதல் நிலை அமுதம் உருவாகும் – உடல் முழுதும் பரவும் குறிப்பாக முதுகு – கால் அடி
மிக குளிர்ச்சியாக இருக்கும்
நல்ல கிளர்ச்சியாக இருக்கும்
68 உறக்க நிலையிலும் விழிப்புணர்வு அளிக்கும்
அது தூங்காத தூக்கம் ஆகும்
69 எப்படி அக நிகழ்வுகள் பாரபட்சமின்றி கவனிக்கிறோமோ ??
அப்படியே
புற உலக காட்சிகள் நிகழ்வுகளையும் ஒரு பார்வையாளன் போல் பாரபட்சமின்றி – “ நடக்கட்டும் “ என பார்க்கும் மனோ பாவனை வந்துவிடும்
போதம் ஒழிந்து விடும்
70 சம்ஸ்கார பதிவுகள் நீக்கும்
அதனால் மௌனம் கிட்டி நிட்டை கூடும்
71
வினைக் கழிவு
முதலில் சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்த வினை , முற்றிலுமாக நீக்கி விடும்
72 சாதகனுக்கு தெரியாத விஷயத்தை தனிப்பாடமாக நடத்தி தெரிய /புரிய வைக்கும்
சாதகனின் அறிவு ஆடையில் எங்கெங்கு துவாரம் இருக்கோ அங்கெல்லாம் அடைத்து , முழுமை அடையச்செயும்
அதுக்கு ஏதாவது ஒரு வழி கையாண்டு பாடம் நடத்தும்
வீடியோ , நூல் , மக்கள் பேச்சு – உரையாடல் என பல்வகையிலும் பாடம் நடக்கும்
73 சாதகனின் விண்ணப்பத்தை சிலதை கேட்காமலே கொடுக்கும் , செயும் – சிலதை கேட்டால் தான் கொடுக்கும் செயும்
74 அசைவு ஒழிந்து வருங்கால் , ஜீவன் ஆன்மாவுடன் இசைந்து செயல்படும்
ஆன்மாவுடன் கருத்து ஒருமித்து நடக்கும்
அது இயற்கை ஆன்மாவுக்கு அடி பணியும் – அடங்கி செயல்படும்
அதன்படி நடக்கும் – எதிர்க்காது – அசுரர் போல்
Psyche will align with Higher Self n Dimensions
It falls in line with Atman
75 எல்லாம் சிவமே ஆற்றுது
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும்
இதெல்லாம் எண்ணத்தின் பெருமை
76 பாசம் சிறிது சிறிதாக விலக , ஆன்ம சாதகன் நோக்கு பதி நோக்கி அமையும் .
தெளிவு நாளுக்கு நாள் அதிகமாகியபடி இருக்கும்
வெங்கடேஷ்