திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
சுத்த சிவம் பெருமை
சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்
தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்
கவமல்ல தில்லை யறுசமை யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே 1534
விளக்கம் :
சுத்த சிவமல்லாது இறை என ஒன்றுமிலை
அவனை அடைவது தவிர தவமாக கொள்வோர் வேறேதும் விரும்புவதிலை
அறு சமயங்கள் கூறும் புற வழிபாடு எலாம் அவனை அடைய வழி கூறாததால் அது அவமாம்
சமயம் புறமாக நிற்கும் போது அவமாகவும் , தியானம் , சமாதி என அகத்துக்கு மாறும் போது அது தவமாகும்
நல்ல தீ ஆக திருவடி ஆக நம்முள் கலந்து நிற்கும் இறை சார்ந்து பிறவி கடக்கும் முறைமை அறிகிலார் மக்கள்
வெங்கடேஷ்