தரமான சம்பவம்
உண்மை – 2022
சன்மார்க்க குழுவில் என் பதிவுகள் படித்துவிட்டு ஒருவர் எனக்கு தொலைபேசியில்
உண்மை சம்பவம் – 2022
பேர் ஊர் தெரிவிக்கவிலை
அவர் :
சாமி நீங்க என்ன தான் காட்டு கத்து கத்தினாலும் , நாங்க தவம் செய மாட்டோம் , மாற மாட்டோம்
அன்னதானம் தான் சன்மார்க்கம்னு இருப்போம்
ஆமாம் – ஐந்து திருமுறை படிக்க மாட்டோம் – ஆறாவது மட்டும் தான் படிப்போம்
நால்வரை மதிக்க மாட்டோம்
திருவாசகம் திருமந்திரம் எல்லாம் படிக்க மாட்டோம்
உரை நடை- எங்களுக்கு வசதியா இருக்கறத வச்சிப்போம் – எதிரானதை கைவிட்டுடுவோம்
ஆமாம் நாங்க வள்ளலார் ரசிக மன்றம் மாதிரி தானு வச்சிக்குங்க
உங்களால எங்கள திருத்த முடியாது
என்ன சாமி பதிலைக் காணோம் ??
நான் : சொல்ல என்ன இருக்கு ??
அதான் எல்லா கேள்விக்கும் நீங்களே பதில் சொல்லிட்டீங்களே ??
உங்களுக்கும் சன்மார்க்கத்துக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்
அவர் வைத்துவிட்டார்
நீண்ட நாளாக என் பதிவு தொடர்கிறார் போல – என் எல்லா விமர்சனமும் அத்துபடி அவர்க்கு
சிரிப்பாக இருக்கு
வெங்கடேஷ்