வாசி பயிற்சி – ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு
வாசியெனும் பரியதனை யிழுத்து வாங்கி
வாயில்நடு வேசெலுத்தி மனைக்குள் ளேகி
மாசறியா வேசியுடன் மதசைய்
யோகம்
மாண்டானென்று றுலகத்தார் பாடை கட்ட
ஊசிவிழும் ஊனுடலும் சூக்க மாகி
உம்பருல கோடுறவாம் ககன மார்க்கத்
தேசொளியாம் சித்தாந்தத் திருவே கண்டீர்
செப்பரிதா மாகாய கமனம் கண்டீர்
விளக்கம் :
சுவாசத்தை இழுத்து பட்டி மண்டபத்தில் ஏற்றி , அதனுள் செலுத்தி , பிரம வெளியில் புகுந்து , குற்றமற்ற நாதம் விளங்கும் அம்மையுடன் கலந்து இருக்கலும் ஆம் – அது சையோகம் ஆம்
உலகம் செத்துவிட்டான் என நினைத்து கவலையுற , அவனோ , நாறிப்போகும் பூத உடல் – சூக்கும உடலாகி மாற்றம் அடைவான்
அவன் பத்தாம் வாசல் அடைந்திருப்பான்
வெங்கடேஷ்