“ கவிகள் பாதி ஞானியர் “

“ கவிகள் பாதி ஞானியர் “ சினிமா பாடல் : “ உன் முகத்தை பாக்கையிலே என் மொகத்தை நான் மறந்தேன் “   இது கண்ணாடி தவ அனுபவத்தை ஒற்றி அமையுது வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்வள்ளற் றலைவன் மலருறை மாதவன்பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 1531 விளக்கம் : உயிர்களிலுள்ளே தானே விரும்பி வந்து அமரும் சிவம் உயிர்களின் தலைவன் ஆயிரத்தெட்டிதழ் கமலம் உறைந்து  நிற்பவன் – அங்கு நிலைத்து நிற்பவன் உடலில் புகுந்து  , ஆயுள் முடியும் சமயம் அதிலிருந்து கிளம்பும்  முறைமை இந்த உலகம் அறியவிலை வெங்கடேஷ்

அகத்தியர் ஞான அமுதம் -சூத்திர ஞானம் 6

அகத்தியர் ஞான அமுதம் -சூத்திர ஞானம் 6 வாசி பயிற்சி தாக்கப்பா இடக்கண்ணு வலக் கண்ணுஞ்சேரு. சச்சிதா னந்த வன்னி தானே ஏறும் மூக்கிலே ஓடாது வாசித் தம்பம். முத்தி யென்ன நெத்திக் கண்ணுள்ளே நிற்கும் . விளக்கம் : சூரிய சந்திரராகிய இரு கண்ணையும் சேர்த்து பயிற்சி ஆற்றினால் , அதன் பயனால் வாசியும் தீயும் மேலேறும் சுவாசம் நாசியில் ஓடாது மேலே நோக்கும் நெற்றிக்கண்ணுக்கு ஏறும் அதனால் முத்தி எனும் அனுபவம் கிட்டும் வெங்கடேஷ்…