“ குணம் “
நாம் எல்லவரும் அறிந்த முக்குணம் – “ ராஜசம் தாமசம் சாத்வீகம் “
இந்த மூன்றின் கலவை தான் ஒவ்வொரு மனிதனும்
ஆனால் இதன் சதவிகிதம் ஒவ்வொருவர்க்கும் மாறுபடும்
இது வெளிப்படும் இடம் நம் சிரசில் உந்திக்கமலத்தில் தான்
மிக மிக முக்கியமானது : பொறாமை பகை பழி தீர்த்தல் வஞ்சம் தீர்த்தல்
இதை நம் இதிகாசம் புராணம் கதைகள் , நம் வாழ்விலேயே கண்டிருப்போம்
இதை தவத்தால் கடந்தால் , குணம் கடந்துவிடுவோம் – மாறுபாடு கண்டு பின்னர் முற்றிலும் நீங்கிவிடும்
இது நம் வாழ்வில் மிக மிக முக்கிய பங்கு ஆற்றி வருது
இது தான் நம் வாழ்வின் எல்லா அம்சத்தையும் , வெற்றி சாதனை பண்பு நிர்ணயிக்குது
நம் மகிழ்ச்சி , குடும்ப அமைதி சூழல் ஒற்றுமை எல்லாத்தையும் இது நிர்ணயிக்குது என்றால் மிகையல்ல
அதனால், இந்த குணம் முக்கியத்தை வலியுறுத்தவே தான் நம் இதிகாசத்தில் இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் கதை சொல்லப்பட்டிருக்கு
அதை படித்து நாம் தெரிந்து கொள்ளணும்
ரஜோ குணம் உடை மனிதன் ஒரு ராஜா அரசன் – சத்வ குணம் உடை ரிஷி ஆவது எவ்வளவு கடினம்
இது எல்லா ஆன்ம சாதகர்க்கும் பொருந்தும்
குணம் கடக்க வேணும் அதுக்கு பாடுபடணும்
நம் தற்போதைய நிலை ஜீவ நிலை குணம் உடைத்து – சகுண நிலை
எல்லா குணத்தையும் அணைத்து நிற்கும் நிலை
நாம் அடைய வேண்டிய நிலை நிர்க்குணம் உடைய ஆன்மா – அது குணமேதும் இல்லாதது
வெங்கடேஷ்