“ சித்தர் பெருமை “ –  ஶ்ரீகாரைச் சித்தர்

“ சித்தர் பெருமை “ –  ஶ்ரீகாரைச்சித்தர்

வர்க்கமெலாம் பணிவர்க்கம் சித்தர் வர்க்கம்

வானவரும் தாளில்விழ வளரும் வர்க்கம்

சர்க்கரையும் தேன்பால்முக் கனியும் காணாத்

தனிச்சுவையாம் மதியமிர்தம் தழைக்கும் வர்க்கம்

அர்க்யமுற வாதவனை யகத்திற் கண்டே

அந்தணனாய் வேதாந்தத் தணைந்த வர்க்கம்

விளக்கம் :

உலகிலுள்ள எல்லாரும் பணிந்து தொழுதேத்தும் வர்க்கம் சித்தர்கள் வர்க்கம்

வர்க்கம் – கூட்டம்

வானிலுள்ள் தேவரும் பணிந்து ஏத்துபவர்கள் தான் சித்தர் பெருமக்கள்

சர்க்க்ரை தேன் பால்

முக்கனி – மா பலா வாழை எல்லாம் கலந்து கொடுத்தாலும் அதுக்கு ஈடாகா வானமுதம் பருகும் வர்க்கம் சித்தர் வர்க்கம்

தவத்தால் தணல் வளர்க்கும் கூட்டமாம் அந்தணராக  ஆன்ம சூரியனை தன் அகத்தில் கண்டே , எல்லா அந்தமும்  கடந்த கூட்டம் சித்தர் வர்க்கம் என சித்தர் பெருமை பாடுகிறார்

யார் அந்தணர் எனில் ??

யார் தவத்தால் தணல் கனல் தீ வளர்க்கிறாரோ  அவரே

இது பிறப்பால் வருவதல்ல

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s