“ குரு பெருமை “
அருட்பா உரை நடை
1 சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள.
அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும்.
“ இஃது ரகசியம் “ .
2 சிருட்டி நியாயம்
ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும். ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம்.
“ இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக “ .
வள்ளல் பெருமான் இந்த மாதிரி நிறைய பகுதிகள் – இது ரகசியம் – குரு முகமாய் அறிக என முடித்திருப்பார்
இதன் மூலம் குரு பெருமை நாம் உணரலாம்
நாம் , ஒரு ஆன்ம சாதகன் என்ன தான் ஆராய்ச்சி செய்து , சாதனைகள் கண்டுபிடித்து , பயின்று , அனுபவத்துக்கு வந்தாலும் அது 99 % பூர்த்தி ஆனது மாதிரி
அந்த 1% குரு வந்து தான் முழுமை செய்வார்
ஆகையால் குரு இல்லாமல் ஞானம் அடைதல் முடியாத காரியம்
ஆனால் சன்மார்க்க அன்பர் : குரு எதுக்கு ? இடைத் தரகரா ?? என்பர்
கூறுவது யார் ?? கேட்பது யார் ??
வேலைக்கு , அரபு நாட்டிற்கு புரோக்கர் மூலம் சென்றவர் தான்
சிரிப்பு தானே ??
குரு தயவு இல்லாமல் ஆணவ மல நிவர்த்தி சாத்தியமே இலை
இதுவும் குரு பெருமை
ஒரு சில பாடம் அருள் தான் நடத்தும் – என்ன தான் மனித வடிவ குரு கற்றுக்கொடுத்தாலும் – அது புரியாது
அருள் உரைக்கும் போது – உள்ளதை உள்ளபடி உரைக்கும் போது – சரியாக புரிந்து விடும்
இதுவும் உரை நடையில் இருக்கு
வெங்கடேஷ்