“ பொன்னியின் செல்வனும் – உடையாரும் “
பொன்னியின் செல்வன் :
இந்த பிரசித்தி பெற்ற வரலாற்று கதையை எழுதியவர் கல்கி
இதில் கதா நாயகன் வந்தியத்தேவன் தான் அருண்மொழி வர்மன் ஆகிய ராஜ ராஜ சோழன் அல்ல
இதில் ராஜ ராஜ சோழனின் அண்ணன் ஆதித்திய கரிகாலன் எப்படி கொலையுண்டான் என்பது ஒரு புதிராகவே முடித்திருப்பார்
யார் செய்தார்கள் ??
நந்தினி ?? ரவி தாசன் ?? பழுவேட்டரையர் ??
இந்த மாதிரி குழப்பத்துடனே கதை முடியும்
உடையார் :
இதை எ சித்தர் பாலகுமாரன் கதை “ உடையார் “ தீர்த்து வைத்துவிட்டது
உடையார் சரித்திர நாவல் , பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்
பொன்னியின் செல்வன் – ஆதித்த கரிகாலன் மரணம் வரை இருக்கும்
ஆனால் உடையார் – அதுக்கு பின் என்ன நடந்தது ??
யார் அவனை கொன்றது ??
ராஜ ராஜ சோழன் அவரை அந்த கூட்டத்தை எப்படி பழி தீர்த்தான் ??
பெரு உடையார் கோவில் எப்படி கட்டினான் அதுக்கு நேர்ந்த கஷ்டம் துயர் என்னென்ன என விரிவாக எடுத்துரைக்குது
ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகையில் கள் மயக்கத்தில் , பாண்டிய ஆபத்துவதிகள் ரவிதாசன் குழுவினர் ஏவிய அமானுஷ்ய சக்திகளால் அறிவு மழுங்கிய நிலையில் இருக்கும் போது , ரவிதாசன் – கட்டாரி எனும் குத்துவாளால் , ஆ கரிகாலன் மார்பில் பாய்ச்சி கொன்றான் என விவரிக்குது
பின்னர் 16 ஆண்டுக்குப் பின் ராஜராஜன் காந்தளூர் சாலைப் போரில் இந்த துரோகிகளை கொன்று பழி தீர்த்ததாக உரைக்குது
ரவிதாசன் குடும்பத்தினர் சுமார் 150 பேர் சோழ தேசம் விட்டு நாடு கடத்தப்பட்டனர் – அவர் சொத்துக்கள் பறிமுதல் செயப்பட்டன என கூறுது
வெங்கடேஷ்