பிறவியும் சிறையும்

பிறவியும் சிறையும் ஒழுக்கத்துடன் விளங்குகின்ற கைதி விரைவில் சிறையிலிருந்து விடுதலை காண்பான் அதே போல தவத்தால் சடங்காக அல்ல இந்திரிய கரண ஒழுக்கம் மேற்கொண்டால் உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை கிட்டும் மோட்ச கதி வெங்கடேஷ்

“ குழலும் – பூங்குழலும் “

“ குழலும் பூங்குழலும் “ குழல் ஒரு ஊதும்  இசைக்கருவி இது  அகத்துக்கும் புறத்துக்கும் பொருந்தும் அகத்தில் என்ன மாறுபாடு எனில் ?? அகத்தில் ஊதினால் அது பூங்குழல் ஆகிவிடும் பூ – தீ நெருப்பு அதில் ஊதும் போது  காற்றும் கனலும் ஆகிய வாசி  ஏறும் சரியாக ஊத அறிந்தார் ஊதுவார் வெங்கடேஷ்

“ ஜலகண்டேஸ்வரர்  – சன்மார்க்க விளக்கம்  “

“ ஜலகண்டேஸ்வரர்  – சன்மார்க்க விளக்கம்  “   இந்த  பிரசித்தி பெற்ற கோவில் வேலூரில்   இருக்கு இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ?? கண்டம் = கழுத்து என உலகம் பொருள் உரைக்கும் கண்டத்தில் எங்கே நீர் இருக்கு ?? ஆகையால் அது கழுத்து குறிக்க வரவிலை கண்டம் எனில் துண்டாக இருக்கும் கண்ணில் நீர் நிரம்பி இருக்கு அதில் கலந்து நிற்கும் இறை என்பதைத்  தான் கோவிலாக  சித்தரிக்கிறார் கண் நேத்திரம் தான் ஜலகண்டம் வெங்கடேஷ்