“ தீபாவளியும் அரசியலும் “
தீபாவளி என்றால் ஏதோ வட நாட்டு பண்டிகை பிராமணர் பண்டிகை – இதுக்கும் நம் தமிழருக்கு தொடர்பிலை என அரசியல் செய்கிறார் நம் த நாட்டு அரசியல்வாதியர்
அதனால் நாம் கொண்டாடக்கூடாது என பேசுகிறார்
இதன் உண்மை புரிந்து கொண்டால் நம்மை எவ்வளவு முட்டாளாக்குகிறார் என புரியும்
உண்மை விளக்கம் :
ஜீவன் ஆகிய இராமன் உச்சி ஆகிய அயோத்திக்கு வருவதைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்
இராவணன் ஆகிய இருளை வென்றதன் அடையாளமாக , உச்சியில் ஒளி ஓங்கியது என்பதன் அடையாளமாக அன்னாளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம்
இருள் ஆகிய மும்மலம் ஒழிந்து ஆன்ம ஒளி ஓங்கியதன் பெருமை தான் தீபாவளி பண்டிகை
அமுதம் இறங்கியது என்பது தான் கங்கா ஸ்னானம் எனும் எண்ணெய் குளியல்
இது ஒளி வழிபாடு தான் அவ்ளோ தான்
இதில் எங்கு சமயம் மதம் புகுந்தது ??
இதிகாசம் எல்லாம் அக யோக ஞான அனுபவம் உலகில் உள்ள எல்லார்க்கும் பொருந்தும் சாதி மத இனம் மொழி நாடு கடந்து
ஒளி வழிபாட்டை எல்லா நாட்டவரும் – சாதி இனம் சமயம் மொழி தாண்டி கொண்டாடலாம்
இதை கிறித்தவரும் முஸ்லிம் மக்களும் கூட கொண்டாடலாம்
இதில் அரசியல் புகுத்தி – மக்களை பிரித்து ஆதாயம் பார்க்கிறார் அரசியல் கட்சியினர்
ஆனால் மக்களுக்கு இதெலாம் புரியாது
அதை நன்கு பயன்படுத்தி குளிர் காய்கிறார் அரசியல் கட்சியினர்
நட்டம் நமக்குத் தான்
வெங்கடேஷ்