“ சுத்த சன்மார்க்கமும் – நாத்திகமும் கிறித்தவமும் “
சுத்த சன்மார்க்கத்தினுள் நாத்திகமும் கிறித்தவமும் நுழைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது
சுத்த சன்மார்க்கம் சாதி மதம் எதிர்ப்பதால் – இதை நாத்திகம் ஆதரித்து – சன்மார்க்கத்தின் வழி தோன்றல் தான் தாம் என உலகை ஏமாத்தறார்
யானையின் ஒரு பகுதி கண்டு அது தான் முழு விலங்கு என எண்ணிக்கொள்வதுக்கு சமம்
சுத்த சன்மார்க்கத்தை இன்னம் சமய மதத்தில் இருப்போராலேயே புரிந்து கொள்ள முடியவிலை
நாத்திகம் எப்படி புரிந்து கொள முடியும் ??
வள்ளலார் ஏதோ சனாதனத்தை கருவேரறுக்க வந்தவர் என மாதிரி திரித்துக் காட்டுகிறார்
நாத்திக மாடல் வள்ளலார் நெற்றியில் நீறு அணிந்திருக்கமாட்டார்
இது ஆள் கடத்தல் நாடகம்
ஆனால் மக்களை ஏமாற்ற இவர் பிறந்த நாள் விழா கொண்டாடுவர் அன்னதானம் செய்வர்
எல்லாம் வரிப் பணம் – கட்சிப் பணமா ??
சுத்த சன்மார்க்கம் என்பது சமய மதம் தாண்டியும் ஆனால் , அதன் அனுபவங்களை உள்ளடக்கியும் வைத்துளது
அது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது
இதை எல்லாம் ஆய்வு செய்தால் தான் விளங்கும்
மேம்போக்காக படித்தால் நாத்திகம் மாதிரி காமாலைக் கண்ணர்க்கு தெரிவது மாதிரி தெரியும்
வள்ளலார் / சுத்த சன்மார்க்கம் பேர் வைத்துக்கொண்டு பல குழுக்கள் தி க / நாத்திகம் பரப்பி வருகிறார் குருடர்கள்
சன்மார்க்கம் இறை நம்பிக்கை அற்ற மார்க்கம் அல்ல
கிறித்தவம் :
இந்த மதம் / நாட்டுக்கு உள்ள நோய் என்னவெனில் ?
உலகில் தலை சிறந்தது எல்லாம் தங்கள் மதம் / நாடு சார்ந்தது , அதன் படைப்பாக இருக்க வேணும் என இறுமாப்பு
அதுக்கேற்றாற் போல் கதை திரிக்குது
அதனால் தான் உலகம் போற்றும் குறளை – தங்கள் மத நூல் என கிறித்தவ சாயம் பூச பார்க்குது
வள்ளுவர் கிறித்தவர் – அவர் தம் மதப்படி ஞான உபதேசம் பெற்று – இந்த அரிய உயரிய படைப்பை செய்தார் என புளுகு அவிழ்த்து விடுகிறார்
வள்ளல் பெருமான் அடைந்த ஒளி தேகம் – இவர் தான் உலகில் முதலில் அடைந்தார் என்பதை பொறுக்க / ஜீரணிக்க முடியாமல் – ஒரு சன்மார்க்க சங்கத்தை விலைக்கு வாங்கி ( அந்த சங்கமும் இவர் வீசும் காசுக்கு வாலை ஆட்டுது , எலும்பை உண்ணுது ) , அதன் மூலம் இயேசு தான் அண்டம் பிரபஞ்சம் தோன்றியது முதல் , ஒளி தேகம் அடைந்த முதல் ஞானி என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்
இதெல்லாம் ஒரு மன / மத நோய்
ஆகையால் “ சுத்த சன்மார்க்கத்தினுள் நாத்திகமும் கிறித்தவமும் நுழைந்து நீண்ட காலம் ஆகிவிட்டது “
காலம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் – இது கூட
வெங்கடேஷ்