அகத்தியர் சௌமிய சாகரம் 1200
தியானம்
பண்ணப்பா தியானமது
பரமகுரு சீர்பாதந்
தியானம் கேளு
உண்ணப்பா கண்ணான
மூலந் தன்னில்
முத்திகொண்ட அக்கினியாஞ்
சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால்
நன்றாய் ஊதி
நடுமனையைப் பிடித்தேறி
நாட்டமாக
விண்ணப்பா கேசரியாம்
புருவ மையம்
மேன்மை பெறத்
தானிறுத்தி
வசிவசி மென்றே. 87
விளக்கம் :
தியானம் எப்படி செய்வது என விவரிக்கின்றார் சித்தர்
பரமகுரு – அவர்/அதன் பாதம் வைத்து தவம் செய்வது எப்படி ??
“ மூலமாகிய கண்ணில்” நோக்கம் நோட்டம் வைத்து , அதன் மூலம் முத்தியாம் சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றாக்கி , நடு மனையாம் மத்திமத்தில் நிலைத்து , வாசி பிடித்து , சுவாசத்தால் பெருஞ்சோதியாக்கி , அகரமாகிய கேசரத்தில் நிலைத்து நிற்றல் ஆகுமே
பரமகுரு – ஆன்மா – ஆன்ம பாதம்
வெங்கடேஷ்
