திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
“ சன்மார்க்கம் பெருமை “
சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே 1567
விளக்கம்:
சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் மீண்டும் பிறவா நெறி , மரணமிலாப்பெரு வாழவு அடையும் பொருட்டு , உலகுக்கு அளித்த நெறி ஒன்று உண்டு
அது மேலான தெய்வ நெறியாம் சன்மார்க்கம் ஆம்
அதை மக்கள் சார்ந்து அந்த பெரு வாழ்வை அடைய வேணும்
இந்த அரும் பெரும் நெறியை சோறு போடும் நெறியாக மாத்திவிட்டார் நம் மக்கள்
வெங்கடேஷ்