திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதரராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறியாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழவாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே 1571 விளக்கம்: இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்கள் தேவர்களாகவும் வித்தியாதர உலகத்தை சேர்ந்தவர் ஆவர் . ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின்…