திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதர
ராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறி
யாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
வாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே 1571
விளக்கம்:
இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்கள் தேவர்களாகவும் வித்தியாதர உலகத்தை சேர்ந்தவர் ஆவர் .
ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை
அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும்.
அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பி தொழுது வணங்கி எமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.
அது எப்படி என்றால் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியாகவும் கண்டு கொண்டேன்
வெங்கடேஷ்