தக்கலை பீர் முகமது – ஞானப் பாடல்
1 கல்லெலாம் உருகச் சாடுங் கனித்த ஓர் கனியை உண்டால்
வெல்லலாம் மனத்தை எல்லாம்
விண்ணொளி காணலாமே.
விளக்கம் :
ஆன்மா அதன் உதவி இருப்பின் கல் ஒத்த மனம் கூட கரையும்
ஆன்மா தான் அந்த கனி
ஆன்ம ஒளியை கூட தரிசனம் செயலாகுமே
2 பத்தியாய் விழிகள் இரண்டும்
பரமதில் ஒடுங்கினாக்கால்
வெற்றியாம்
விளக்கம் :
தவத்தில் சாதனத்தில் எப்போது வெற்றி – எப்போது நிட்டை கூடும் ??
இரு விழியை பரங்குன்றம் எனும் மேடையின் குரு சொற்படி ஒன்று படுத்தினால் , நிட்டை தவத்தில் வெற்றி
ஆனால் விழி எப்படி இருக்க வேணும் ?? என்பதெலாம் குரு கற்றுத்தருவார்
இது உலகளாவிய முறை பயிற்சி ஆகும்
வெங்கடேஷ்