தக்கலை பீர்முகமது
தக்கலை பீர்முகமது விண்ணொளி காணவேண்டின் மெய்யிறை அருளினாலே கண்ணொளி உருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில்நோக்கிப் பொன்னொளி மேவும் வாலைப்பொருள்ரசம் அருந்தி மேலாத் தன்னொளி கண்டு ஞானத் தானவன் ஆகலாமே. பொருள் : ஆன்ம ஒளி தரிசனை ஆக வேண்டின் : அருளினால் , அருளினால் மட்டும் இரு கண் ஒளிகள் சேர்த்து கட்டி , மனதை அதில் நிறுத்தினால் , வாலை ரசம் எனும் அமுதம் உண்டு , தன் சுய ஒளியாம் ஆன்ம ஒளி காணலாகுமே…