“ வள்ளலார் மறைவு – மரணமா ?? சித்தியா ?? “
இந்த நூலை எழுதியவர் மறைந்த சித்த வைத்திய ரத்தினம் திரு பலராமையா அவர்கள்
இதில் வள்ளலார் சித்தி சந்தேகத்திற்குரியது – அது மரணம் – சித்தி அல்ல என தன் கருத்து தெரிவித்திருக்கார்
அதுக்கு தான் இந்த நீண்ட பதிவு
இவர் நீதிபதி ஆக இருந்தவர்
சித்த வைத்தியத்தில் தீவிர ஈடுபாடு – அதன் காரணமாக நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்
தானே பதிப்பித்து வெளியிட்டார்
அதில் நான் 1980 -90 களில் படித்தவை
1 சாகாக்கலை
2 அமுத கலசம்
3 சித்தர் மெய்ப்பொருள்
இவர் தான் குமார தேவர் எழுதிய “ சுத்த சாதகம் “ எனும் நூலை இணைப்பாக தன் நூலில் தன் எழுத்துக்கு பிரமாணமாக வெளியிட்டார்
இவர் குரு கருணாகர சுவாமிகள் ஆவார்
இவர் தன் வாழ் நாள் முழுதும் முப்பூ எனும் சித்த மருந்து தேடிக்கொண்டிருந்தார்
அதில் தோல்வி கண்டார்
முப்பூ என்பது காயகல்ப – ரசவாதம் செயும் மூலிகை மருந்து ஆகும்
இது மரணத்தை வெல்லும் மருந்து அல்ல – தள்ளிப்போடும் அவ்வளவே – சாகாக்கலையின் பல படி நிலைகளில் இதுவும் ஒன்று
இவர்க்கு வள்ளல் பெருமான் மீது தீவிர ஈடுபாடு – தன் பதிப்பகம் பேர் அருட்பெருஞ்சோதி என பேர் வைத்தார்
அப்படிப்பட்டவர் தன் இறுதி நாளில் மேற்கண்ட தலைப்பில் நூல் எழுதி வெளியிட்டார்
உலகத்தை உலுக்கினார்
கீழ் கண்ட பாடல்கள் மூலம் வள்ளல் பெருமான் முத்திறல் முத்தேக சித்தி பெற்றது உறுதியாகிறது
1 சுத்த – பிரணவ – ஞான தேகம்
ஐந்தாம் திருமுறை
ஆளுடைய நம்பிகள் அருள்மாலை
சுத்த – பிரணவ – ஞான தேகம்
மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவன்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவன் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர்
இன்புருவம் ஆயினை நீ எழில்வாத வூர் இறையே
திரண்ட கருத்து :
பன்னெடுங்காலம் மனம் அடக்கினவர்க்கு எந்த அனுபவமும் கிடைக்காமல் இருக்க , நீர் அன்புருவம் என்னும் சுத்த ( ஆன்ம ) தேகத்தை முதலில் சித்தி செய்து கொண்டும் , பின்னர் அருளுருவம் என்னும் பிரணவ தேகம் சித்தி செய்தும் , அதன் மேல் இன்புருவம் என்னும் ஞான தேகம் பெற்றுக் கொண்டனை என்று மாணிக்க வாசக பெருமானை புகழ்கின்றார் வள்ளல் பெருமான்
2 “ ஞான தேகம் – மாணிக்க வாசகரும் வள்ளல் பெருமானும் “
திருவாசகம் : திருவண்டப்பகுதி
மாணிக்க வாசகர் தம் ஞான தேக அனுபவம் :
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175
உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே. 1
அருட்பா :
உருஅண்டப் பெருமறை என்றுலகமெலாம் புகழ்கின்ற
திரு அண்டப் பகுதி எனும் திரு அகவல் வாய் மலர்ந்த
குரு என்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவே நீ
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கியம் புதியே.
(திருவருட்பா-2309)
மன்புருவ நடு முதலாமனம் புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற் றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னும்
“இன்புருவம் “ ஆயினை நீ எழில் வாதவூர் இறையே.
இதில் வள்ளல் பெருமான் மாணிக்க வாசகர் பெற்ற ஞான தேகத்தை உறுதி செயும் அருட்பா தான் மேல் உள்ளது
இருவரும் உரைக்கும்
அள்ளூறாக்கை என்பதுவும் , இன்ப தேகம் என்பதுவும் ஞான தேகம் குறிப்பிடுவது தானே அல்லாது வேறல்ல
அது “ வாய் விட்டு உரைக்க முடியாத இன்ப அனுபவம் அளிப்பதாகும் – சொல்லிறந்த இன்பம் அளிப்பதாகும்
எல்லை இல்லாத – சொல்ல வார்த்தை இல்லாத அளவுக்கு இன்பம் அளிப்பதாகும் ஞான தேகம்
அது சுத்த சுகாதீத பெருவெளி – பெரு ஞ்சுக வெளி என்றெல்லாம் பெயர் பெறுகிறது
அது இறுதி நிலை அனுபவம் – 17 வது நிலை சுத்த சிவ சன்மார்க்கத்தின் உச்ச அனுபவம்
வள்ளல் பெருமானின் ஞான தேகம் அனுபவம் :
2 அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51
தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
“ இன்பவடி வாக்கி” என்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
இன்ப வடிவம் = ஞான தேகம்
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 46
3 துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
“ சுகவடிவந்” தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே
பொருள் :
துரிய பதம் கடந்த நிலையில் இருக்கும் அபெஜோதி வருகிறார்
ஞான தேகம் அளிக்க என் ஆன்மாவுக்கு துணைவர் வருகிறார்
சுக வடிவம் = இன்ப தேகம் ஆம் ஞான தேகம்
பிரமர்களுக்கும் – மூவர்க்கும் காண அரிதான பொருள் ஆம் என் ஆண்டவர் வருகிறார்
பித்தர் என மறை புகலும் – சித்சபையில் நடம் பயிலும் என் தெய்வம் வருகிறார் என்று பர நாதம் கேட்கிறது என்கிறார்
இறையின் வருகையை நாதம் முன்னமே தெரிவிக்கும்
உனக்கு உரிமை உள்ளதால் நீயும் இதை கேட்டு , மன வாட்டம் எல்லாம் நீங்கி களித்திடுவாய் முழுதுமே
அதனால் தான் வள்ளல் திருவாசகத்தை உற்று நோக்குங்கள் – இந்த மார்க்கத்து உண்மை புரியும் என்றார்
நம் அன்பர் அதை காற்றில் பறக்க விட்டார் – திருவாசகம் சமய நூல் ஆம்
ஆகையால் மாணிக்க வாசகர் தான் ஞான தேகத்துக்கு முன்னோடி – சுத்த சன்மார்க்கத்துக்கும் சேர்த்து
3 பாண்டி அரவிந்தர் ஆசிரம திரு கங்காதர சுவாமிகள் கண்ட நெற்றிக்கண் காட்சி – இதை வள்ளலாரே காண்பித்ததாக APJ n Deathless bodies என்ற நூலில் திரு TR Tulasi Ram எழுதி உள்ளார்
வள்ளலார் உடம்பு என்ன ஆயிற்று என்ற சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன
– அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் கட்டுரை – இதில் கண்டபடி திரு கங்காதரன் , அரவிந்தர் ஆசிரம் கண்ட தீர்க்கதரிசனம் ( கனவு அல்ல ) படி அவர் உடல் அருள் ஒளி அணுக்களை மாறி அண்ட சராசரம் எங்கும் , எல்லா பொருட்களிலும் கலந்தது என்பது உண்மை –
அது தான் நடந்து இருக்க வேண்டும்
ஏனெனில் , வள்ளல் பெருமான் ” இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் – பின் எல்லார் உடலிலும் புகிந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்திருக்கின்றார் – அவ்வாக்கு உண்மை ஆகிவிட்டது
சுத்த ஞானியரின் வாக்கு தப்பாது –பொய்த்துப் போகாது
எனவே வள்ளலாரின் உடல் அருள் அணு அணுவாய் மாறிப் போனது உண்மை
இந்த செய்தியை – கட்டுரையை எந்த சன்மார்க்கத்தவரும் நம்புவதில்லை
ஆகையால் வள்ளல் பெருமான் மரணம் அடைந்தார் , வைதீக எதிர்ப்பால் கொலை செய்யப்பட்டார் என கதை கட்டி விடுவது எல்லாம் அப்பட்ட பொய்
அவரை சூளையில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டார் என கதை கட்டி விடுகிறார்
இப்போது இதை வைத்து அனேக காணொளிகள் பதிவிடுகிறார் – உலகை ஏமாற்ற – திசை திருப்ப
அவர் தம் தேகம் எதனாலும் ஒன்றும் தீண்ட முடியா நிலையில் இருக்கிறது
மேலும் இவ்வாறு முறைகேடாக எழுதி இருக்கிறீரே என சன்மார்க்க ஊரன் அடிகள் = வைத்தியர் பலராமையாவிடம் வினவினாராம்
அதுக்கு அவர் : ஏதோ ஒரு மனோ நிலையில் எழுதிவிட்டேன் – தவறு தான் என கூறியதாக சேலம் குப்பு சாமி ஒரு வீடியோவில் பேசியுள்ளார்
அதையும் நோக்குதல் மிக மிக அவசியம்
4 மேலும் சில கூற்றுகள் கவனிக்க வேண்டியது யாதெனில் ??
சித்த வைத்தியர் திரு பலராமையா ஒன்றும் ஞானி அல்லவே – அவர்க்கு
1 எட்டிரெண்டு
2 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்
3 அமுதம் ஆகாய கங்கை
4 பர விந்து
5 வாசி
விளக்கம் பயிற்சி அனுபவம் இல்லாதவர்
அவர் எப்படி மற்ற ஒரு தலை சிறந்த விஞ்ஞானி / ஞானி அளவீடு செய முடியும் ??
ஆகையால் அவர் தம் கூற்றை பெரிதுபடுத்தத் தேவையிலை – கண்டு கொள்ளத் தேவையிலை என்பது என் கருத்து
வெங்கடேஷ்
பி கு :
ஏன் இந்த நீண்ட பதிவு எனில்
வள்ளலார் வெளி எனும் இணைய தளத்தில் இந்த நூல் சார்ந்து கருத்து ஒரு வெளிநாட்டவர் பதிவிட்டிருந்தார்
அதுக்கு பதிலாகத் தான் இந்த பதிவு