“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “

“ ஆண்டாள்   கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “  திருப்பாவை – 17 அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய் அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய் “ செம்பொற் கழலடி “  செல்வா! பலதேவா! உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்!  விளக்கம் : அதாவது திருவடிகள் செம்மை கலந்த பொன் நிறத்துடன் இருக்கும் என தான் கண்ட திருவடி தரிசனத்தை நம்முடன் பகிர்கிறார் ஆண்டாள்…

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் கழலார் கமலத் திருவடி யென்னுநிழல்சேரப் பெற்றே னெடுமா லறியாவழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே 1600 விளக்கம்: சிரத்தில் சிற்றம்பலத்தில்  , சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடி  நிழலோடு  யானும் கலந்தனன் நீண்ட நெடும் ஜோதியாக  அண்ணாமலையாக நின்றவனை ,   திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதி அவன் எமக்குள் இருக்கின்ற  ஆன்மஒளி உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு…

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வுகரையற்ற சத்தாதி நான்குங் கடந்தசொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே 1593 கருத்து: தான் எந்த அனுபவத்திருந்தோம் என்பதை இந்த மந்திரம் மூலம் எடுத்துரைக்கிறார் வாக்கு அற்ற உணர்வு அற்ற  சலனம் இல்லா – அசைவிலா பிரம்ம அனுபவத்துடன் கலந்து ஒன்றாகி சமாதியில் இருந்தனன் பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெறுப்பு ஆகிய நான்கிற்கும் உலக அளவில் வரையறுக்கப் பட்ட எல்லைகள் உண்டு.…

“ ஆண்டாள் பாசுரம் திருப்பாவை பாடும் முறை  “

“ ஆண்டாள் பாசுரம் திருப்பாவை பாடும் முறை  “ இதை பாடுவது ஆண்டாள் கோஷ்டி – ராமானுஜ கோஷ்டி முதல் 4 வரிகள் ஆண்கள்  – ராமானுஜ கோஷ்டி பின் 4 வரிகள் ஆண்டாள் கோஷ்டி பெண்கள் பாடுவர் ஏன் ?  நாத விந்து  கலவை  தான் ஆன்மா என்பதால் பெருமாள் = ஆன்மா ஆகையால் அதன் சன்னிதி முன் இவ்வாறு பாடுகிறார் மக்கள் வெங்கடேஷ்

“ தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் – சன்மார்க்க விளக்கம் “

“ தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் – சன்மார்க்க விளக்கம் “ ஆண்டாள் பாசுரம் : “ பங்கயக்கண்ணானை பாடேலோர் எம்பாவாய் “  அப்படி எனில் ?? 1008இதழ் தாமரையில் விளங்கும் ஆன்மாவாகிய கண்ணன் தான் அது தாமரை  ஆகிய  நெற்றிக்கண் விளங்குபவன்  தான்  தாமரைக்கண்ணன் – பங்கயக்கண்ணன் வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு கதா நாயகன் : நடு நடுவில மானே தேனே பொன் மானே கலை மானே போட்டுக்கணும் என்ன? யோகா குரு : இறைவா ஞான சித்தர் ஞான பிரான் வெட்ட வெளி சித்தர் இப்படியாக என் பேருக்கு பின்னாடி சேர்த்துக்கணும் சீடர் : சரி இறைவா வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 1 நபர் 1 பகிர்வு

அன்பர் சந்திப்பு   – பாகம் 2

அன்பர் சந்திப்பு   – பாகம் 2 கோவை சாரதாம்பாள் கோவிலில் நடந்த  சந்திப்பின் விவரம் உண்மை சம்பவம்  – நவம்பர் 2022 அவர் : ஏன் உங்க பயிற்சி மக்கள் ஏற்றுக்கொளவிலை ??  நான் : அவர்க்கு அதன் மீது சந்தேகம் எப்படி வாசி அரை  மணியில் கற்றுத்தர முடியும் ?? ஞானம் அடைய நெற்றிக்கண் பயிற்சி விளக்கம் 2 மணி   நேரத்தில் சாத்தியம்   ?? அதனால் வருவதிலை ஏதோ மர்மம் தப்பு   இருக்குது என நினைக்கிறார்…

“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “

“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “ 16 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடையகோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ “ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் “ . பொருள் : நாம் எல்லவரும் நினைத்துக்கொண்டிருப்பது ஆண்டாள் பக்தி செய்து ரங்கனை மணந்தாள் என ஆனால் அவள் யோகத்தாலும் ஞானத்தால் தான்…

“ பத்தாம் வாசல் பெருமை “

“ பத்தாம் வாசல் பெருமை “ 1 சகஸ்ரநாமம் இது பேர் குறிக்கவரவிலை நாமம் சகஸ்ராரத்துக்கு வரை ஏறுவதால்சகஸ்ராரம் – 1008இதழ்க் கமலம் 10 வாசல் 2 நாமக்கல் நாமமானது கல் ஆகிய சுழிமுனை வரை ஏறுவதால் இந்த பேர் மேலும் வாசியானது இதுக்கு உதவுவதால் , வாசி ஆகிய அனுமார் கோவில் இங்கு கட்டப்பட்டுளது எப்படி நம் முன்னோர் அறிவு ?? வெங்கடேஷ்

“ அன்பர் சந்தேகமும்  என் விளக்கமும் “

“ அன்பர் சந்தேகமும்  என் விளக்கமும் “  ஓருவர் என் பயிற்சி  பற்றிக் கேட்ட போது நான் : பதிவுகள் – என் முக நூலில் / வலையில் படிப்பது இலவசம் மகளிர்க்கு சாதாரண  அரசுப் பேருந்தில் இலவச பயணம் மாதிரி ஆனால் சொகுசு  பேருந்து எனில் கட்டணம் மாதிரி பயிற்சிக்கும் அவர் : சரி என சிரித்துக்கொண்டார் வெங்கடேஷ்