வாசி

இன்று 3.12.22 ஒருவர் வாசி பயிற்சி பெற்றார் பவானி லாரி ஓட்டுனர் இவர் 25 ஆண்டுகளாக சரியான பயிற்சி தேடியபடி இருந்துளார் மேலும் இவர் சித்த வித்தை – பாட்டு சித்தரிடம் பயிற்சி எடுத்துள்ளார் என் பதிவுகளை ரெண்டு ஆண்டாக தொடர்ந்து வருகிறாராம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கற்றதாக தெரிவித்தார் வெங்கடேஷ்

“ வாசி பெருமை “

“ வாசி பெருமை “ விசா  ( கடவு சீட்டு ) இல்லாமல் வெளி நாட்டுக்கு போக முடியாது வாசி இல்லாமலும் வெளி  நாட்டுக்கு போக முடியாது குழப்பமாக இருக்கா ? வெளி எனில் சிற்றம்பல பொன்னம்பல  வெளிகளுக்கு வெங்கடேஷ்  

“ அடிப்படை  2   “

“ அடிப்படை  2   “   1 எல்லா சித்திக்கும் விந்து தான் அடிப்படை கர்ம யோக ஞான சித்திக்கும் 2 மனம் ஒழிவதுக்கும் அசைவு ஒழிவதுக்கும்  பார்வை  –  கண் தான் அடிப்படை 3  ஞானம் அடைவதுக்கும் விந்துவும் வாசியும் அடிப்படை   ஆர் ஒத்துக்கொள்கிறார்  -ஆற்றுகிறார் ?? வெங்கடேஷ்

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  “

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  “ விஞ்ஞானம்  : நம் இ மெயில்  கணக்கு முகவரியில் தேவையில்லா நிறைய நிறைய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும் Spam ஸ்பாம் என்பர் அதை காலக்கிரமத்தில் குப்பையில் சேர்க்க வேணும் – சுத்தம் செய வேணும் மெய்ஞ்ஞானம் :   நம் சித்தத்திலும் இந்த மாதிரி நம் வாழ்வின் எல்லா   நிகழ்வுகளும் சேகரிக்கப்படுகின்றன அதை எப்படி நீக்குவது ?? தவத்தினால்  நீக்கினால் தான் தவத்தில் மேலேற முடியும் வெங்கடேஷ்