திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே 1588
விளக்கம்:
இந்த உலக பொருட்கள் எலாம் ஆய்ந்து , அதில் மிக சிறந்ததாக சிவமே என தெளிந்து கொண்டேன்
அதனால் அருள் அடைந்தேன்
அதன் பயனாய் – இந்த உலக வாழ்வு உடல் நினைவு மறந்தேன் – பற்றுக்கள் நீக்கினேன்
பிறந்திறந்து பிறந்திறந்து ஈனம் அளிக்கும் பிறவித் தொடரை ஒழிந்தேன்
வெங்கடேஷ்