“ ஆச்சாரியும் ஆச்சாரியனும் “
இந்த பதிவும் பாலகுமாரன் சரித்திர நாவல் உடையார் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுளது
தலைப்பை ஊன்றி படிக்கவும்
ரெண்டும் ஒன்றல்ல
முதலாவது பொற்கொல்லர் கம்மாளர் குறிப்பது
ரெண்டாவது குரு ஆசிரியர்
ஆச்சாரி – இவரும் கழுத்தில் பூணூல் அணிந்திருப்பர்
நான் சிறு வயதில் எங்கள் வீட்டில் நகை செயும் போது , ஆச்சாரி கடைக்கு செல்லும் போது பார்த்துள்ளேன்
அது எப்படி சாத்தியமானது என்பது தான் இந்த பதிவு
நீண்ட போராட்டத்துக்குப் பின் தான் இது நடந்தேறியுளது
ராஜ ராஜ சோழன் காலம்
சோழம் பேரரசாக விரிவடைந்திருந்த காலம்
பலப் பல போர்களை நடத்தி சாளுக்கியம் ( மேலை /கீழ் ) தற்போதைய ஒரிசா , பாண்டிய நாடு , சேர நாடு வென்று பேரரசாக திகழ்ந்த காலம்
இத்துணை போர்கள் வெல்ல தேவையான எல்லா ஆயுதங்கள் அளித்தது தாங்கள் தான்
அதனால் சோழம் செழித்து இந்த உயர் நிலையில் இருப்பதுக்கு தாங்கள் தான் முழு முதற் காரணம் என அந்த சமூகம் நினைப்பில் இருந்த காலம்
அந்த தேசங்களிலிருந்து வென்று வந்த செல்வத்தால் சோழம் செல்வச் செழிப்புடனும் இருந்தது
படைத் தளபதிகள் போர் திறம்பட நடத்தி வெற்றி வாகை சூடியது ஒரு புறம் இருந்தாலும் , அவர்க்கு தேவையானது எல்லாம் அளித்தது தாங்கள் தான் என கம்மாளர் நினைத்திருந்தனர்
இதனை ஆமாம் என ஆமோதித்து வந்தது ராஜேந்திர சோழன்
இதனை மனதில் கொண்டு அவர்கள் பேரரசரிடம் சில கோரிக்கைகள் வைத்தனராம்
10 அம்ச கோரிக்கை மாதிரி
1 வீடு கட்டிக்கொள்ளுதல்
2 திண்ணை அமைத்துக்கொள்ளல்
3 காலில் செருப்பு அணிந்து கொள்ளல்
4 பல்லக்கில் பயணம்
5 வீட்டு விசேஷத்தில் நாயனம்
6 சுண்ணம் பூசிக்கொளுதல்
7 மிக மிக முக்கியமானது பூணூல்
இந்த மாதிரி
முதல் மூன்றும் ராஜராஜ சோழனால் அங்கீகரிக்கப்பட்டதாம் .
பெரிய கோவில் கட்ட தேவையான உளி ஆணி செய்ய இவர் உதவி தேவையானதால் இதை ஒப்புக்கொண்டாராம்
பூணூல் போடுவதை அந்தணர் எதிர்த்தனராம்
அப்போது ராஜேந்திர சோழன் தான் குறுக்கிட்டு இந்த உரிமைகள் சலுகைகள் வழங்குவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதிலை என வாதிட்டாராம்
அப்போது ராஜராஜருக்கும் குந்தவைக்கும் ராஜேந்திர சோழனுக்கும் பெரும் வாக்குவாதம் நடந்ததாகவும் , இவர் தம் சேவை குறித்து எதனால் நாம் இந்த அளவுக்கு உயர்ந்து சோழப்பேரரசாக இருக்கிறோம் , எப்படி தன் உயிரை இவர் செய்து கொடுத்த ஒரு கொசு வலை போன்ற கேடயம் காப்பாற்றியது என்றெல்லாம் உதாரணம் காட்டி , இவர்க்கு எல்லாம் வாங்கிக்கொடுத்ததாக உடையார் நாவலில் பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளார்
ராஜராஜரும் குந்தவையும் அந்தணர்க்கு ஆதரவாக இருந்ததாகவும்
ராஜேந்திர சோழன் பிராமணர் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்த தாகவும் அவரை சாடி வந்ததாக நூல் கூறுது
அந்த குலம் நாட்டுக்கு எந்த பங்களிப்பும் அளிப்பதிலை – போர் கோவில் கட்டுதல் என எதிலும் என கடிந்து கொண்டாராம்
ராஜேந்திர சோழன் கம்மாளர்க்கு ஆதரவாக இருந்ததாகவும் – இதை நான் அரியணை எப்படியும் வாங்கித் தருவேன் என சபதம் இட்டதாகவும் வரலாறு கூறுகிறது
கொடுத்தபடி வாக்குறுதியை நிறைவேற்றினாராம் ராஜேந்திர சோழன்
படிப்படியாக இவர் தம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன
வெங்கடேஷ்