அன்பர் சந்திப்பு
உண்மை சம்பவம் நவம்பர்’ 22
ஒரு அன்பர் – சன்மார்க்கம் அல்லர்
கோவை வடவள்ளி – vallalarspace.com ல் பழக்கம் 2015 முதல்
இவர் என் பதிவுகள் தொடர்பவர்
இவரும் ஆய்வு செய்பவர் – வேறு துறையில்
என்னை நேரில் சந்திக்க விரும்பினார்
என் வீட்டில் வேண்டாம் என்றார்
கோவை Race course – சாரதா அம்பாள் கோவிலில் சந்திப்பு
ஒரு மணி நேர சந்திப்பு
அவர் : உங்கள் பதிவுகள் மிக நன்றாக இருக்கு
நீங்கள் True seeker of God என்றார்
போலிகள் மத்தியில் நல்ல கருத்து- ஆய்வு செயப்பட்ட கருத்து
நான் : நன்றி
அவர் : நீங்கள் கற்றுத்தருவதாக அறிந்தேன் – நல்லது
ஆனால் அதுக்கு தட்சணை வாங்குவது ??
நான் : ஆமாம் நான் ஏன் இலவசமாக கற்றுத்தர வேண்டும்??
அந்த கட்டணம் என் 30 ஆண்டு உழைப்புக்கு , நான் வாங்குகிறேன்
அதில் தவறேதும் இருப்பதாக தெரியவிலை
பலர் என்னிடம் ஞானம் அந்த காலத்தில் இலவசமாக கற்றுத்தந்தார் என்பர் .
என்னிடம் சண்டை போடுவர்
அப்போது அவர் குருவுக்கு பணிவிடை செய்தார் – அதுக்கு பிரதியாக அவர் இலவசமாக கற்றுத் தந்தார்
அதே போல் , நீங்களும் என்னிடம் வந்து சில ஆண்டுகள் சேவை செயவும் என்றவுடன் அவர்க்கு கோபம் வருது – போனை துண்டித்துவிடுவார்
நான் இப்போது சுமார் 10000 பதிவுகள் போட்டிருப்பதுவும் சேவை தான்
அதே போல் கட்டணம் வாங்கி வித்தை கற்றுத்தருவதும் சேவை தான் – கோவை சாந்தி கியர்ச் செய்வது போல்
நான் அளிக்கும் விளக்கம் போல் – கற்றுத்தரும் பயிற்சி போல் யாரும் கற்றுத்தரவிலை – நெற்றிக்கண் திறப்பு – ஒளி தேகம் போல்
தவறாக கற்றுத் தருகிறார் , போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்
அவர் : ஓ அப்படியா ??
நான் : இது என் முடிவு – இது பத்தி பேச யாருக்கும் உரிமை இலை
அவர் : பயிற்சி , அனுபவம் ??
நான் : 3 – 4 மணி நேரம்
குறிப்பிடத்தக்க அனுபவம் : என் பாதம் மென்மை அடைதல் – உடல் பிரபஞ்ச பேராற்றல் கிரகித்தல்
திருவடி பெருமை – கண்மணி பெருமை என்றேன்
அவர் : ஆஹா பிரமாதம்
ஏன் யூ டியூப் காணொளி மூலம் விஷயம் சொல்லக்கூடாது ??
நான் : எங்கே நேரமிருக்கு ??
இதுக்கே நேரம் போனால் பின் எங்கே சாதனம் தவம் செய்வது அனுபவத்துக்கு வருவது ?? நான் கடைத்தேறுவது
குடும்பம் தொழில் தவம் என வாழ்வு போகுது
இந்த அளவுக்கு உலகத்துக்கு சேவை செய்வது போதும் – நேரம் ஒதுக்குவது போதும்
என் பதிவுகளை அதிகம் படிக்கமாட்டார் – கருத்தை ஒப்புக்கொள்ள மாட்டார் – பின் எப்படி வீடியோ ??
அவர் ; யார் எல்லாம் கற்கிறார் ??
நான் : எல்லா யோகா குழு பயிற்சியாளரும் தான்
குறிப்பாக மீஞ்சூர் சங்கம் – குமரி செல்வராஜ் – சித்த வித்தை – சாலை
ஆனால் கற்போர் மிக மிக குறைவு
என் முறை மக்கள் ஏற்பதிலை நம்புவதிலை
மேலும் யார் குரு தவத்தில் எலும்பு பயன்படுத்தணும் என சொல்லியிருக்காரோ ?? அவர் தம் மாணவர் என்னிடம் கற்க வருகிறார்
நான் அவ்விதமே கற்றுத் தருவதால்
அவர் : ஓ அப்படியா
வெங்கடேஷ்
தொடரும்