உரை நடை முரண்
ஒரு சாதனமும் வேணாம் – எவ்வுயிரையும் தன் உயிர் போல பாவனை வளர்த்துக்கொளல் வேண்டும்
சரி ??
ஆப்ப இது என்ன ??
1 மனதை சதாகாலமும் சிற்சபையில் நிறுத்தப் பழகணும் அதுக்கு பூர்வம் புருவமத்தியில் நிறுத்தப் பழகணும்
2 அருட்பா உரை நடை – நித்திய கர்ம விதிபக்கம் 243
” புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கத்தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் ( புணர்ச்சி ) வேண்டும் ”
அவ்வுபாயமாவது ” பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே உலாவச் செய்து கொள்ளலாம் ”
இங்கு பிராணவாயு = ” வாசி ”
வள்ளல் கூறுவது சுழுமுனை நாடியில் வாசியை மேலும் கீழும் உலாவச் செய்தால் விந்து வெளியேறா
பெண் மையல் ஒழியும்
இதை வள்ளல் பரிந்துரைக்கிறார் எனில் வாசி யோகம் அவர் செய்திருக்கிறார் என தான் அர்த்தம் ஆகிறது
பின் இதெல்லாம் ஏன் வள்ளலார் உரைக்க வேணும் ??
அப்படியே விட்டிருக்கலாம் அல்லவா ??
ஜீவகாருண்ணியம் தயவு – அன்னதானம் என விட்டிருக்கலாம் அல்லவா
வெங்கடேஷ்

1Badhey Venkatesh