“ கங்கை பெருமை – ஆண்டாள் பாசுரம் “
திருப்பாவை பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
“ தூய பெருநீர் யமுனைத் துறைவனை “
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
விளக்கம் :
இது புறத்தே ஓடும் யமுனை நதி குறிக்க வரவிலை
அமுதம் சிறுக சிறுகத் தான் ஊறும் என்பதால் பெருநீர் என மாற்றி அழைக்கிறாள் ஆண்டாள்
யமுனை = சுழிமுனை குறிப்பது
அங்கிருக்கும் ஆன்மா ஆகிய கண்ணன்
அதனால் யமுனை ஆகிய நதியில் உறைபவன்
உலகம் நினைத்துக்கொண்டிருப்பது ஆண்டாள் பாசுரம் என்பது பக்தி மயமானது
ஆனால் உண்மையில் அது ஞான மயமானது
ஆழ்ந்து ஆழந்து ஆய்வு செய்வோர்க்கு விளங்கும்
வெங்கடேஷ்