திருவாசகம் – குலாப்பத்து
திருவாசகம் – குலாப்பத்து வினைகள் தீர்க்கும் உபாயம் என்புள் உருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. விளக்கம் : அதாவது , இரு வினை ஒழிப்பது என்பது எலும்பில் இருக்கும் ரகசியம் . சாதனையால் , அதனுள் இருக்கும் விந்து கலையை உருக்கினால் , இரு வினை ஒழியும் – பழ வினைகள் எல்லாமும் ஒழியும் வெங்கடேஷ்