“ தவமும் ஒழுக்கமும் “
காந்தாரி தன் கண் பார்வையால் துரியன் உடலை கல்பம் செய முடிந்தது எனில் ??
அது இந்திரிய ஒழுக்கத்தால் விளைந்த பயன்
அந்த ஒழுக்கமே தவமாக மாறியது என்றால் அது தவறல்ல மிகையல்ல
ஒழுக்கம் தவத்துக்கு அடிப்படை
ரெண்டும் பின்னிப்பிணைந்தவை
ஆனால் இந்த ஒழுக்கமே முழுமையான தவம் அல்ல
அது ஒரு பகுதி
அது முழு சாப்பாடு அல்ல – அது ஒரு காய் கூட்டு , பொரியல் மாதிரி
தவத்தின் படி நிலைகள்
ஒழுக்கம் வேண்டும்
அதனால் தவம் கை கூடும்
அதனுடன் தானமும் சேர்ந்தால் விண்ணகர் ஏகி விண்ணவர் ஆகலாம்
அதனால் தான் வள்ளல் பெருமான் இந்திரிய கரண ஒழுக்கம் வலியுறுத்துகிறார்
இந்திரிய கரண ஒழுக்கம் தவத்தால் கைகூடுமே அல்லாது வெறும் வாய் பேச்சால் அல்ல
எல்லாம் காரணமாகத் தான்
வெங்கடேஷ்