உரை   நடை முரண்கள் – தொகுப்பு

உரை   நடை முரண்கள் தொகுப்பு  

1 சன்மார்க்கத்தில்
வள்ளல் பெருமான் உரை நடையில்
திருமந்திரம் திருவாசகம் படிக்கச் சொல்கிறார்

அகவலில்
சமய மதங்கள் பொய் என்கிறார்

திருமந்திரம் திருவாசகம் சமய மத நூல்கள் இலையா??

2 வள்ளலார் – பேருபதேசத்தில் – பச்சைத் திரை – இரு கூறுகளாக இருக்கின்றது – கருமையிற் பச்சை – பொன்மையில் பச்சைத் திரை என்று பிரிக்கின்றார்.

முதலாவது இகலோக இச்சை உடையது என்றும் – மேலிருக்கும் இரண்டாவது திரை பரலோக சாத்தியம் உடையது என்றும் கூறுகின்றார்.

மேலும் வள்ளலார் , அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வரும் போது, முயற்சி சிறிதும் இல்லாதவர்களுடைய கீழிருக்கும் கருமையிற் பச்சைத் திரை மாத்திரம் விலக்குவார் – இதனால் – நாம் கூடிய மட்டும் புனிதர்களாக இருப்போமே அல்லாது – பெற வேண்டியதை பெற்று கொள்ள முடியாது என்றும் கூறுகின்றார்

கருமையிற் பச்சைத் திரை விலகிவிட்டால் , அதிவிரைவில் மற்ற எல்லா திரைகளும் விலகிவிடும் என்கிறார்.

வள்ளலார் வாக்கு உண்மையெனில் , எல்லோருடைய கருமையிற் பச்சைத் திரை இன் நேரம் விலகி இருக்க வேண்டும் அல்லவா ?? ஏன் எனில் , 99.95 %  சன்மார்க்கிகள் முயற்சி சிறிதும் இல்லாமல் – எந்த ஒரு சாதனமும் செய்யாமல் – சோறு மட்டும் போடுதல் சன்மார்க்கம் என்று இருப்பதால் , இந் நேரம் அவர்களுடைய கீழ் பச்சைத் திரை ஆண்டவர் விலக்கி இருக்க வேண்டும் – ஆனால் அவ்வாறு நடக்க வில்லை .

வள்ளலார் வாக்கு தப்பாது – அப்படியெனில் – பேருபதேசம் மற்றும் உரை நடை யாவும் வள்ளலார் தம் கைப்பட எழுதியவை அன்று.

அவரின் தொண்டர்கள் அவர் கூறியவற்றை தொகுத்து வழங்கியது தான் உரை நடைப் பகுதி என்று உறுதி ஆகின்றது.

அது போலவே , உரை நடையில் இருக்கும், புராண இதிகாசங்களைப் பற்றிய குறிப்பும் , திருப்பாற்கடல் மற்றும், கல்ப நியாயம் பற்றிய குறிப்பும் அவருடைய தொண்டர்களுடையதாக இருக்குமே அல்லாது வள்ளலாருடையதாக இருக்காது

3 எல்லா சன்மார்க்க சங்கத்தாரும் உரை நடை நம்பி மோசம் போகின்றார்

முக்கியமாக : “ சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

இதன் விளக்கங்கள் உரை நடையில் இருப்பினும் – அது தவறாகவே இருக்கு

ஏன் எனில் இது வள்ளல் தன் திருக்கரங்களால் எழுதப்பட்டதன்று – அவர் தம் அணுக்கத்தொண்டர்களால் தொகுத்து வெளியிடப்பட்டது

ஆனால் எல்லாரும் அதை உண்மை என நம்பி அதையே பயன்படுத்துகிறார்

வள்ளல் நிறைய விஷயம் மறைத்துவிட்டார் – அதில் சாவேபோவும் அடங்கும்

எனவே இதை நம்ப வேணாம்

தக்க குரு மூலம் இதன் உண்மை அனுபவ விளக்கம் பெறவும்

இல்லையெனில் தாங்களாகவே ஆய்வு செய்து கண்டுபிடிக்கவும்

இது தான் சரியான வழி

4 வள்ளல் இதில்
ஓரிடத்தில்
சமய மதத்தவர் 13 நிலை குருதுரியாதீதம் வரையில் தான் அனுபவத்துக்கு வந்துள்ளனர் எங்கிறார்

அவர் கூறும் சுத்த சன்மார்ர்க்கம் 17 நிலை சுத்த சிவ துரியாதீத நிலை

பின் எப்படி சைவம் திரு சிற்றம்பலம் என்னும் 16 நிலை வரை அனுபவம் விளக்கி இருக்கு – சிதம்பரம் கோவில் மூலம்

சிற்றம்பலத்துக்கும் 17 வது நிலை சன்மார்க்கத்துக்கும் 1 படி தான் வித்யாசம்

குரு துரியாதீதம் விட உயர் நிலை சிற்றம்பல நிலை

5  ஐந்து மாற்று சுவர்ண தேகி பிரமன் வயசு – 4 லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம்

இது தவறு

நம் வேத ரிஷிகள் கல்ப கணக்கை கணித்திருக்கின்றார்கள் – இதனைக் கொண்டு பிரமன் – விஷ்ணு – ருத்திரன் ஆயுள் கணக்கு இட்டிருக்கின்றார்கள்

பிரமன் அரை  நாள் =  432 கோடி வருடங்கள் ( நம் நாள் )
ஒரு நாள்   =   864 கோடி வருடங்கள் ( நம் நாள் )
இப்படி போகின்றது அவர் ஆயுள் – அவர் ஆயுள் – 100 வருடங்கள் – நீங்களே  கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

எனவே சன்மார்க்கத்தவர்கள் உரை நடை முழுவதுமாக நம்ப வேண்டாம் –

பேருபதேசம் கூட வள்ளலார் கைப்பட எழுதியது அன்று

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s