திருமந்திரம் – ஆறாம் தந்திரம்
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வு
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே 1593
கருத்து:
தான் எந்த அனுபவத்திருந்தோம் என்பதை இந்த மந்திரம் மூலம் எடுத்துரைக்கிறார்
வாக்கு அற்ற
உணர்வு அற்ற
சலனம் இல்லா – அசைவிலா
பிரம்ம அனுபவத்துடன் கலந்து ஒன்றாகி சமாதியில் இருந்தனன்
பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெறுப்பு ஆகிய நான்கிற்கும் உலக அளவில் வரையறுக்கப் பட்ட எல்லைகள் உண்டு. ஆனால் ஆகாயத்திற்கு எல்லையே இல்லை.
அந்த ஆகாய பாகத்தில் விளங்கும் ஆன்மாவுடன் கலந்திருந்தனன்
வெங்கடேஷ்