“ இருதயமும் ஆன்மாவும் “

“ இருதயமும் ஆன்மாவும் “ கௌஷீதகீ உபநிஷத் “எங்ஙனம் உறையில் வாள் வைக்கப்பட்டுள்ளதோ, அங்ஙனம் இருதய கமலத்தில் கட்டை விரல் ( அங்குஷ்ட மாத்ர) பிரமாணமுள்ள புருஷன் உறைகிறான்.” இதில் இருதய கமலம் = 1008 இதழ்க்கமலம் ஆகிய பீடம் புருஷன் = ஆன்மா இருதயம் எனில் கழுத்துக்கீழ் உள்ள உறுப்பு அல்ல வெங்கடேஷ்

“ வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் “

“ வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் “ கீழ் உள்ள படத்தில் அவர் கண்ணாடி தவம் செய்த அறை இந்த பயிற்சி யாரும் பார்க்கவண்ணம் தான் செய்வர் அது தான் முறை அதனால் தான் அண்ணியாரிடம் தனக்கு தனி அறை வேணும் என கேட்கிறார் அடிகள் அதனால் அவர் தங்க சபை உரைக்கும் ஒளி தூண்டுதல் பயிற்சி அல்ல பயின்றது அப்படி இருந்தால் , அதுக்கு தனி அறை தேவையிலை அது வேற வெங்கடேஷ்

“ இருதயம் – பத்தாம் வாசல்  பெருமை “

“ இருதயம் – பத்தாம் வாசல்  பெருமை “ இது ரத்தமும் சதையும் நாளமும் உடை உடல் உறுப்பை குறிக்கவரவிலை சிரசில் விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் உண்மை இருதயம் அகத்தியரின் சௌமிய சாகரம் :  “ஆதி என்ற இருதயமே கமல பீடம்”. மேலும்  நமசிவய என்னும்  ” பஞ்சாட்சரமானது உனது இருதயத்திற்குள்ளாக பிரம்மப் பிரகாச பீடமாக “  உட்கார்ந்து இருக்கிறது. அதாவது சிரசின் உச்சியில் ஆன்ம ஒளி இருப்பிடத்தில்    பஞ்சாட்சரமானது விளங்குது என்றபடி வெங்கடேஷ் 

“ இந்து சமயத்தில் ஏன் அதிகமான திருவிழாக்கள் “  ??

“ இந்து சமயத்தில் ஏன் அதிகமான திருவிழாக்கள் “  ?? நம் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை வந்து கொண்டே இருக்கும் மாசி மகம் மார்கழி திருவாதிரை சிவராத்திரி நவராத்திரி என வரிசை கட்டி நிற்கும்   ஏன் ?? விளக்குவது இந்த பதிவு உண்மை சம்பவம் – பாலகுமாரன் உடையார் சரித்திர நாவலில் இருந்து எடுக்கப்பட்டுளது  ராஜ ராஜ சோழன் காலம் –  1000 ஆண்டுக்கு முன்பு  ராஜ ராஜ சோழன் மகள் ஒரு…

முக்காலம் தொடும் பேப்பர்

முக்காலம் தொடும் பேப்பர் நாளை ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு இன்று திறக்கிறார் நேற்று திறக்கப்பட்டது என செய்தி போட்டு நிரப்புவர் ஆனால் மாறி இருப்பது உலகம் : நேற்று இன்று நாளை பேப்பர் : நாளை இன்று நேற்று வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு அரசர் மட்டும் கங்கை கொண்டவர் அல்லர் ராஜேந்திர சோழன் மாதிரியாக ஆன்ம சாதகரும் ஞானியரும் ஆகாய கங்கை கொண்டவர் தான் உன்மனி கலை அமைத்தவரும் நிலா மண்டபம் ஏறியவரும் கங்கை கொண்டவர் ஆவர் வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam மற்றும் 2 பேர் 2 பகிர்வுகள்