திருவெம்பாவை :
“ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்”
திருவெம்பாவை :
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
“ செங்கமலப் பொற்பாதந் “ தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
திருப்பாவை 17 :
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
“ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!
திருவடி விளக்கம் இந்த வரிகளில் எப்படி ஒத்துப்போகின்றார் ??
ஒருவர் சைவம் ஒருவர் வைணவம் ?? என உலக மக்கள் பிரிக்கிறார்
ஆனாலும் தவஅனுபவம் ஒன்றே தான்
ஞானியர் எப்படி ??
மக்கள் எப்படி ??
வெங்கடேஷ்