” மார்கழி பெருமை”
மாணிக்கவாசகர் இயற்றிய
திருவெம்பாவை
செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின்பநம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
யங்க ணரசை யடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் 17 .
விளக்கம் :
இந்த வரி தான் மிக மிக முக்கியமானது :
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
பங்கயப் பூம்புனல் எனில் உலகத்தில் இருக்கும் தாமரை அல்ல அதன் நீர் அல்ல உலகம் கற்பிதம் செய்வது போல்
1008இதழ்க்கமலத்தில் இருந்து சொட்டும் அமுதம்
அதில் நீராடல் தான் உண்மையான மார்கழி நீராடல்
அது அக அனுபவம்
புறத்தில் ??
மார்கழி மாத அதிகாலையில் வீசும் அமுதக்காற்று நம் உடலில் படும்படி எழுந்து சத்காரியம் –
1 கோலம் போடுதல்
2 கோவில் செல்லுதல்
இந்த மாதிரி காரியங்களால் நாம் பிரபஞ்சப் பேராற்றல் அமுதக் காற்று சுவாசித்தால் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை
அதனால் தான் கண்ணன் : மாதங்களில் நான் மார்கழி
வெங்கடேஷ்

