திருமந்திரம் – ஆறாம் தந்திரம்
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் ஞாதுரு ஞான ஞேயம் தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டுதானென் றபூவை யவனடி சாத்தினால்நானென் றவனென்கை நல்லதொன் றன்றே 1607 விளக்கம்: தான் ஆகிய ஜீவனும் அவன் ஆகிய ஆன்மாவும் இந்த இரண்டு தத்துவத்தையும் தன் அகத்தில் தவத்தினில் கண்டு , தான் எனும் அசைவை ஒழித்து ஆன்மாவுடன் கலந்து நின்றால் , தானும் அவனும் நல்லதான ஒன்றே என உணர்வான் வெங்கடேஷ்