“ சங்கு ஊதுதல் “
பாரதத்தில் அர்ஜீன் / பீமன் எந்த பகைவரை கொன்றாலும் , உடன் சங்க நாதம் ஒலித்து அதை தூரத்தில் இருக்கு மற்றவர்க்கு உடன் தெரியப்படுத்துவர்
இது சங்கேத மொழி
உண்மையில் தவத்தில் கூட நாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் போதும் , பகைவராம் தத்துவங்களும் கழன்றபடி இருக்கும் . அது மாண்டு போவதுக்கு சமம்
எவ்வளவு பெரிய ஞானவிஷயத்தை எப்படி கதையாக தெரிவித்துளார் நம் முன்னோர் ??
சங்கு ஊதுவது , நாம் ஊதினால் ஒரு 2/3 நிமிடம் தாக்குப்பிடித்து ஊத முடியும் – செய்வோம்
அதுக்கு மேல் முடியாது
இதுவே இயல்பாக நடந்தால் – 24 மணி நேரமும் ஊதியபடி இருக்கும்
இது தான் வேணும்
நாம் ஊதக்கூடாது தானாகவே நடக்க வேணும்
அது தான் சரியான சாதனம்
நீங்க எப்படி ??
ஜாக்கிரதை – நேரம் சக்தி வீணாகிவிடும்
வெங்கடேஷ்