திருமந்திரம் – ஆறாம் தந்திரம்
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடு
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்கு
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே 1611
விளக்கம்:
வாக்கும் மனமும் கடந்து , வெறுமை அடைந்த ஆன்ம சாதகர் துவாத சாந்தப் பெரு வெளி அனுபவமாம் முத்தி அடைந்திருப்பர்
அவர்க்கு அதனால் பற்பல சித்திகள் அற்புத ஆற்றல்கள் கிடைத்திருக்கும்
சங்கேத மொழிகள் – உடல் மொழிகள் கூட அவரிடமிருந்து நீங்கியிருக்கும்
அவரிடத்தில் , சன்னிதானத்தில் ஐந்தொழில் ஆற்றும் ஆற்றல் விளங்கும்
வெங்கடேஷ்