திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்
வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே 1608
விளக்கம் :
உயிர் உடல் / பிறவி எடுத்த போது , அதனுடன் சேர்த்து வைத்த 36
தத்துவங்களையும் அகற்றி கழற்றி என்னை சுத்தன் ஆக்கி , மேலான பர / பரம நிலைக்கு மேலேற்றி , அதனுடன் கலக்க வைத்து அதன் மயமாக்கி , இனி பிறவி சுழலில் மீட்டும் வருமோ என்ற அச்சத்தை நீக்கி எனை ஆண்ட குரு நந்தி
இங்கு பரம நிலை நந்தி என்பன யாவும் ஆன்மாவையே குறிக்குது
ஆன்மா செய்த அரும்பெரும் அனுபவத்தை உரைக்கிறார் மூலர் பெருமான்
வெங்கடேஷ்