“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருவடிப் பேறு “
முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வ
ரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 1601
விளக்கம்:
சிரசில் கிரீடம் சூடிய மன்னர் மூவுலகை ஆள்வர் எனினும் , அவர்கள் அடியவர் அடையும் இன்பம் அளவுக்கு அடையவிலை
அடியவர் இறை திருவடியை நெஞ்சிலும் சிரசிலும் வைத்துளதால் அவர் இன்பத்துக்கு எல்லையிலையாம்
அப்படி தேவர்களும் இறை இறை திருவடியை நெஞ்சிலும் சிரசிலும் சூடினால் அவர்களும் மும்மலம் கழிந்து சுத்தமாக இருக்கலுமாகும் அடியவர் போல்
அவர்க்கு ஆணவமலக் கழிவு ஆகவிலை
வெங்கடேஷ்