“ அக்காலமும் இக்காலமும் “
அக்காலம் :
ராஜ ராஜ சோழன் காலத்தில் அதாவது அவர் பெரியப்பா மகன் மதுராந்தக சோழன் தமிழ் நாட்டை ஆண்ட காலத்தில் , கேரள நம்பூதிரியர் தான் முதல் / நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் ,
அந்தணர் கை ஓங்கியிருந்த காலத்தில் , அவர் 5 வயது பிள்ளை தெருவில் இறங்கி விளையாடினால் , அரசு தேர் பல்லக்கு குதிரை எல்லாம் சுற்றி தான் செல்லணுமாம்
அந்த தெருவழியாக செல்ல முடியாதாம்
அவர்க்கு அவ்வளவு மரியாதை வைத்திருந்த காலம்
இக்காலம் :
மேலே இருப்பது தான் இப்போதும் நடக்குது
பிணத்தை கீழ் ஜாதி மக்கள் சுடுகாட்டுக்கு எடுத்து போகும் போது , உயர் ஜாதி தெரு வழியாக / அவர் பக்கம் போகாதவாறு செல்லணும் என இங்கும் அங்கும் நடக்குது
இது அவலம்
இது விட இன்னும் ஒரு படி மேலேறி ,
நம் விநாயகர் ஊர்வலம் மத்த மதத்தவர் வசிக்கும் தெரு வழியாகக் எடுத்து செல்லக்கூடாது என அவர் போடும் தடை
சிரிப்பதா வேதனைப்படுவதா ??
ஆக ஆக , பல ஆயிரம் ஆண்டு கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வதால் , ஜாதி மதம் பேதம் சண்டை ஒழிக்கவே முடியாது என இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்
எத்தனை சமூக சீர்திருத்தவாதி வந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்
அப்படி சாதித்து விட்டேன் என அவர் கூறினால் அது ஓட்டுக்காகத் தான்
வெங்கடேஷ்