திருமந்திரம் ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்
முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தன னந்தியே. 1609
விளக்கம்:
இறைவனை அறிய ஞானம் அடைவதுக்கு முன்னம் நானும் மத்தவர் போல் முட்டாளாகத் தான் இருந்தனன்
இந்த வேற்றுமையை எனக்கு அறிவித்து தெளிவித்தான் என் நந்தி
பின் என்னுள் இருந்த இந்த வேற்றுமை நீக்கி , ஞானத்தை அளித்து – மேலானவன் ஆக்கி – ஆன்ம நிலையில் இருத்தி என்னை எனக்கு அறிவித்தனன் என் நந்தி
வெங்கடேஷ்